ஆஸ்திரேலிய டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் உடைக்கப் போகும்.. விராட் கோலியின் அபார சாதனை

Suryakumar yadav virat kohli
- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்தியா பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா ஃபைனலில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது.

அதனால் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்கள் உடைந்த நிலையில் அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் இத்தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சாதனை படைப்பாரா:
மேலும் ஹர்திக் பாண்டியா காயத்தை சந்தித்துள்ளதால் சூரியகுமார் யாதவ் இத்தொடரில் இந்தியாவை வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்தது உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே திண்டாட்டமாக செயல்பட்டு வரும் அவர் டி20 கிரிக்கெட்டில் அதற்கு நேர்மாறாக அசத்தி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக எப்படி போட்டாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் திறமையை கொண்டுள்ள அவர் ஏற்கனவே பாபர் அசாம் முகமது ரிஸ்மான் போன்ற பாகிஸ்தான் வீரர்களை முந்தி உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். அந்த வகையில் சூரியகுமார் யாதவ் இதுவரை 50 இன்னிங்க்ஸில் 1841 ரன்களை 172.70 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வரிசையில் இத்தொடரில் இன்னும் 159 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வேகமாக 2000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் படைப்பதற்கு பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதற்கு முன் விராட் கோலி 56 இன்னிங்ஸில் 2000 ரன்கள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும். ஒருவேளை முதல் போட்டியிலேயே அந்த 159 ரன்களை அடித்தால் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைப்பார்.

இதையும் படிங்க: ரிலாக்ஸ் ஆஸ்திரேலியா.. நீங்க வின்னர் தான்.. ஆனா இப்போவும் சொல்றேன்.. வார்னருக்கு கைப் பதில்

இதற்கு முன் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் தலா 52 இன்னிங்சில் 2000 ரன்கள் எடுத்திருப்பதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. அதை உடைப்பதற்கு சாத்தியம் குறைவாக இருந்தாலும் விராட் கோலி சாதனையை அவர் உடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த வகையில் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினம் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement