ரிலாக்ஸ் ஆஸ்திரேலியா.. நீங்க வின்னர் தான்.. ஆனா இப்போவும் சொல்றேன்.. வார்னருக்கு கைப் பதில்

Kaif Warner 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மாபெரும் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அனைத்து அணிகளையும் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து உச்சகட்ட ஃபார்மில் அசத்தி வந்தது.

ஆனால் முக்கியமான ஃபைனலில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. மறுபுறம் ஆரம்பத்திலேயே இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அதன் பின் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஃபைனலுக்கு வந்தது.

- Advertisement -

கைப் பதில்:
அந்த வாய்ப்பை வீணடிக்காமல் ஃபைனலில் பேட்டிங் பபுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் துல்லியமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வலுவான இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து 6வது கோப்பையை தங்களுடைய வெற்றி அலமாரியில் அடுக்கியது. அதனால் 2003 போலவே தாங்க முடியாத தோல்வியை இந்திய ரசிகர்கள் சந்தித்தனர். அதனாலேயே ஃபைனலில் சிறந்த அணியாக ஆஸ்திரேலியா வென்றது என்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் முகமது கைஃப் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

குறிப்பாக தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடிய இந்தியா தான் ஆஸ்திரேலியாவை விட பேப்பரில் மிகவும் வலுவான அணியாக இருந்ததாக அவர் கலங்கிய கண்களுடன் நேரலையில் பேசியிருந்தார். இருப்பினும் ஆதங்கமான உணர்ச்சிகளுடன் அவர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ளாத டேவிட் வார்னர் “பேப்பரில் யார் வலுவாக இருக்கிறார்கள் என்பதை விட களத்தில் தேவைப்படும் நேரத்தில் யார் அசத்துகிறார்கள்” என்பதே முக்கியம் என்று நேற்று ட்விட்டரில் பதிலடி கொடுத்திருந்தார்.

- Advertisement -

மேலும் 2027 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா வந்தாலும் அப்போதும் நாங்கள் சிறப்பாக விளையாடி தோற்கடிப்போம் என்றும் வார்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டேவிட் வார்னர் பெயரை குறிப்பிடாமல் கைஃப் மீண்டும் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு. “உண்மை. ஃபைனல் ஆஸ்திரேலியாவின் நாளாக இருந்தது. அவர்கள் வென்றார்கள். அவர்கள் உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார்கள்”

இதையும் படிங்க: வேர்ல்டுகப்ல அப்படி ஆடிட்டு இப்போ இப்படி பேசலாமா? புதிய கேப்டன் சூரியகுமார் யாதவை – கிண்டல் செய்யும் ரசிகர்கள்

“மேலும் உண்மைகள். இந்தியா கச்சிதமாக தொடர்ந்து 10 போட்டிகளில் வென்றது. 11வது போட்டியில் தோற்றது. அவர்களிடம் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தனர். அவர்கள் இத்தொடரின் சிறந்த அணியாக இருந்தார்கள். குறிப்பாக களத்திலும் பேப்பரிலும் அவர்கள் சிறந்த அணியாக இருந்தார்கள் என்பது உண்மை. ரிலாக்ஸ் ஆஸ்திரேலியா” என்று கூறியுள்ளார்.

Advertisement