வேர்ல்டுகப்ல அப்படி ஆடிட்டு இப்போ இப்படி பேசலாமா? புதிய கேப்டன் சூரியகுமார் யாதவை – கிண்டல் செய்யும் ரசிகர்கள்

SKY
- Advertisement -

அகமதாபாத் மைதானத்தில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்ட இந்திய அணி சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் கோப்பையை பறிகொடுத்தது. இந்திய அணி பெற்ற இந்த தோல்வி குறித்து கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதோடு இந்த கோப்பையை தவறவிட்ட வருத்தத்தையும் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க என்னென்ன காரணம்? எந்தெந்த வீரர்கள் தவறு செய்தனர்? என்பது குறித்த பல்வேறு விமர்சனங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

அதன்படி நவம்பர் 23-ஆம் தேதி இன்று தொடங்கும் இந்த தொடரானது டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இந்த தொடரில் இந்திய வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம் என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இப்படி அவர் தெரிவித்த இந்த கருத்து தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி நேரத்தில் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக இடம்பிடித்த சூரியகுமார் யாதவ் டி20 போட்டிகளை போன்றே அதிரடியாக விளையாடி அணியின் ரன் குவிப்பை அதிகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 ஏலத்தில் அந்த 2 வெளிநாட்டு பிளேயர்ஸ் தான் அதிக தொகைக்கு போவாங்க.. அஸ்வின்

ஆனால் முக்கியமான இறுதி போட்டியில் 28 பந்துகளை சந்தித்த அவர் 18 ரன்கள் மட்டுமே குவித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி உலகக் கோப்பை இறுதி போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நீங்களா பயமற்ற ஆட்டத்தை பற்றி பேசுவது என்று ரசிகர்கள் சூரியகுமார் யாதவின் இந்த பேட்டியை கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement