ஐபிஎல் 2024 ஏலத்தில் அந்த 2 வெளிநாட்டு பிளேயர்ஸ் தான் அதிக தொகைக்கு போவாங்க.. அஸ்வின்

Ashwin 2
- Advertisement -

இந்திய ரசிகர்களை அடுத்த கோடைகாலத்தில் மகிழ்விப்பதற்காக நடைபெற உள்ள ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வேலைகள் இப்போதே துவங்கியுள்ளன. குறிப்பாக அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விடுவிக்க நினைக்கும் வீரர்களை கழற்றி விட்டு வருகின்றன. மேலும் தங்களுக்கு தேவைப்படும் முக்கிய வீரர்களை மினி ஏலத்தில் அணிகள் வாங்குவதற்கு தயாராக இருக்கின்றன.

அந்த ஏலத்தில் 2023 உலகக்கோப்பையில் அபாரமாக விளையாடிய நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஃபைனலில் இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு சதமடித்து மிரட்டிய டிராவிஸ் ஹெட், கேப்டனாகவும் பவுலராகவும் அசத்திய பட் கமின்ஸ் போன்ற ஆஸ்திரேலியா வீரர்கள் இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு விலை போவார்கள் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் தேர்வு:
இந்நிலையில் அவர்களை விட 23 வயதிலேயே சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை உடைத்து அறிமுக உலக கோப்பையில் அதிக ரன்கள் (578) அடித்த வீரராக சாதனை படைத்த நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 2024 மினி ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போவார் என்று நம்புவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதே போல தொடர்ந்து வெறும் 23 வயதில் 145 – 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி ஒரு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை (20) எடுத்த தென்னாப்பிரிக்க பவுலராக மாபெரும் சாதனையை படைத்த ஜெரால்டு கோட்சியும் பெரிய தொகைக்குப் போவார் என்று எதிர்பார்ப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “578 ரன்களை 64 என்ற சராசரியில் எடுத்து அவ்வப்போது ஸ்பின்னராக பந்து வீசிய ரச்சின் ரவீந்திரா துவக்க வீரராகவும் களமிறங்க கூடியவர். எனவே எந்த அணிகளுக்கு டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடுவதுடன் சில ஓவர்களை வீசும் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் தேவைப்படுகிறதோ அந்த அணிகள் இவரை வாங்குவதற்கு போட்டியிடலாம்”

- Advertisement -

“இதுவரை டி20 கிரிக்கெட்டில் அவர் பெரிய அளவில் அசத்தவில்லை என்றாலும் நல்ல வருங்காலத்தைக் கொண்டுள்ளார். என்னுடைய 2வது வீரர் ஜெரால்ட் கோட்சி. தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான அவர் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு விலை போகலாம். ஏனெனில் அவர் தொடர்ந்து 145 – 150 வேகத்தில் ஆக்ரோஷமான பவுன்சர்களை வீசும் திறமையை கொண்டுள்ளார்”

இதையும் படிங்க: ஒரு சதம் அடிச்சுட்டா போதும்.. உடனே அதை செஞ்சுருவீங்க.. பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவை விளாசிய கம்பீர்

“எனவே ஜெரால்டு கோட்சி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய 2 வீரர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் நான் பார்க்கக்கூடிய முக்கிய வீரர்களாக இருப்பார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்த 2 வீரர்களுமே 23 வயது மட்டுமே நிரம்பியவர்களாக இருப்பதுடன் இந்திய சூழ்நிலைகளில் அசத்தினர். எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு இவர்களை வாங்குவதற்கு நிறைய அணிகள் போட்டி போடலாம்.

Advertisement