ஒரு சதம் அடிச்சுட்டா போதும்.. உடனே அதை செஞ்சுருவீங்க.. பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவை விளாசிய கம்பீர்

Gautam Gambhir 7
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் மாபெரும் ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த சோகத்திலிருந்து முழுமையாக வெளி வருவதற்குள் மீண்டும் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது பெரும்பாலான ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

அதை விட அத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி, கேஎல் ராகுல், பும்ரா போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகியுள்ளார். அதனால் சர்வதேச டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக சூரியகுமார் யாதவ் இத்தொடரில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்த உள்ளது ரசிகர்களை மேலும் கடுப்பாக வைக்கிறது.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
ஏனெனில் 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்விக்கு காரணமாகும் வகையில் சுமாராக செயல்பட்ட அவர் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாதவராக இருக்கிறார். எனவே இது போன்ற சமயங்களில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்ற ருதுராஜ் கைக்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றும் இந்திய அணியின் கேப்டனாக வருவதற்கு இப்போதெல்லாம் தகுதியே இல்லாமல் போய்விட்டதாக பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினரை கௌதம் கம்பீர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இளம் வீரர்கள் ஒரு சதமடித்தால் போதும் உடனடியாக அவர்களிடம் கேப்டன்ஷிப் பதவி கொடுக்கப்படுவதாக விளாசும் கம்பீர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஏதாவது ஒரு இளம் வீரர் சதமடித்தால் அவர் அடுத்த கேப்டனாக பாவிக்கப்படுகிறார். கடந்த 4 வருடங்களில் எத்தனை பேர் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. எடுத்துக்காட்டாக இந்த போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடினால் அவர் அடுத்த போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார். அதே போல ஷ்ரேயாஸ் ஐயர் சதமடித்தால் இந்தியாவின் அடுத்த கேப்டனாகி விடுகிறார்”

இதையும் படிங்க: அனைத்து கிரிக்கெட்டிலும் விளையாட வெ.இ ஜாம்பவான் வீரருக்கு ஐசிசி அதிரடி தடை.. காரணம் என்ன?

“ரிஷப் பண்ட் இருந்த போதும் இதே கதை தான் இருந்தது. இங்கே கேப்டன்ஷிப் என்பது முக்கியமல்ல. நாட்டுக்காக போட்டியை வெல்வதே முக்கியமாகும். கேப்டன்ஷிப் என்பது வெறும் பொறுப்பாகும். ஆனால் இந்திய அணியில் கேப்டன் பதவிக்கு போட்டி காணப்படுகிறது. தற்போது ரோஹித் சர்மா உலகக் கோப்பையை வெல்லாததால் யார் அடுத்த கேப்டன் என்ற கேள்வி இருக்கிறது. ஒருவேளை அடுத்ததாக வரும் கேப்டனும் கோப்பையை வெல்ல தவறினால் அதற்கடுத்ததாக இந்தியாவை வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது” என கூறினார்.

Advertisement