அடுத்த 5 மாசத்துக்கு சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர் அஷ்வினை பார்க்கவே முடியாதாம் – வெளியான தகவல்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியானது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் மழையின் காரணமாக வெற்றியை தவறவிட்டது.

Ashwin

- Advertisement -

அதன்படி ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் துவங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டமானது மழை காரணமாக முற்றிலும் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகனாக முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரின் தொடர் நாயகன் விருது அறிவிக்கப்படவில்லை.

ஒருவேளை தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டிருந்தால் அது தமிழக வீரர் அஷ்வினுக்கு தான் என இந்திய அணியின் முன்னாள் ஜாஹீர் கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஷ்வின் இனி அடுத்த ஐந்து மாதங்களுக்கு இந்திய அணியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Ashwin-1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் பேட்டிங்கில் ஒரு அரைசதம் என அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவர் இந்திய அணியில் விளையாட மாட்டார் என்பதற்கான காரணம் யாதெனில் :

- Advertisement -

இந்திய அணி இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துக் கொண்டு அயர்லாந்து நாட்டிற்கு பயணிக்க இருக்கிறது. அதன் பின்னர் ஆசிய கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை தொடர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் என இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலேயே விளையாட இருக்கிறது. ஏற்கனவே அஸ்வின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அடுத்ததாக டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாட முடியும்.

இதையும் படிங்க : IND vs WI : வெ.இ ஒருநாள் தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகி நாடு திரும்பிய இந்திய நட்சத்திர வீரர் – காரணம் இதோ

இந்நிலையில் இந்திய அணிக்கு அடுத்த ஐந்து மாதங்களுக்கு எவ்வித டெஸ்ட் போட்டியும் இல்லை என்பதனால் 5 மாதங்களுக்கு இந்திய அணியில் அஸ்வினை பார்க்க முடியாது. அதன்பிறகு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலே அஸ்வின் இடம் பிடிப்பார் என்பதனால் அடுத்த ஐந்து மாதங்களுக்கு இந்திய அணியில் அஷ்வினை பார்க்க முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement