பும்ராவை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு ஓய்வினை வழங்க திட்டம். யார் அந்த வீரர் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சிலர் இடம்பெறாத வேளையில் அவ்வப்போது சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட இருப்பதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவ்வேளையில் கூடுதலாக தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு தேவைப்பட்டால் ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது தனது தாயின் உடல்நிலை காரணமாக சென்னை திரும்பிய அவர் அடுத்த நாளே அணிக்கு திரும்பினார்.

- Advertisement -

எனவே அவர் ஒரு போட்டியில் ஓய்வு எடுக்க விருப்பப்பட்டால் நிச்சயம் அவருக்கு ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை அவருக்கு ஓய்வு தேவையில்லை என்று நினைத்தால் அவர் தொடர்ந்து விளையாடுவார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து ஜெயிக்கனும்ன்னா.. ஆண்டர்சனை தெறிக்க விட்ட அவரை சீக்கிரம் அவுட்டாக்கனும்.. மைக்கேல் ஆதர்டன்

ராஜ்கோட் நகரில் நடைபெற்ற போட்டியில் மூன்றாம் நாளில் சென்னை சென்ற அவர் நான்காம் நாள் மீண்டும் அணியில் இணைந்து விளையாடியதால் அவர் நிச்சயம் நான்காவது போட்டியில் ஓய்வை கேட்டு பெறமாட்டார் என்றே தெரிகிறது, இருப்பினும் இந்த முடிவு அவரின் கைகளிலே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement