இங்கிலாந்து ஜெயிக்கனும்ன்னா.. ஆண்டர்சனை தெறிக்க விட்ட அவரை சீக்கிரம் அவுட்டாக்கனும்.. மைக்கேல் ஆதர்டன்

Micheal Atherton
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய தொல்லையை கொடுத்து தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா போன்ற மற்ற வீரர்களை காட்டிலும் வெறும் 22 வயதிலேயே அடித்து நொறுக்கி வரும் யசஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். ஏனெனில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 545* ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்துள்ள அவர் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ஆண்டர்சனுக்கு எதிராக:
குறிப்பாக ராஜ்கோட் நகரில் நடந்த மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தின் ஜாம்பவான் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக அவர் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டது ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் மகத்தான ஜேம்ஸ் ஆண்டர்சனையே அசால்ட்டாக அடிக்கும் ஜெய்ஸ்வாலை அடுத்து வரும் போட்டிகளில் விரைவாக அவுட்டாக்கினால் மட்டுமே இங்கிலாந்து வெற்றி பெற முடியும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டன் எச்சரித்துள்ளார்.

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அற்புதமான இளம் வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை அதிகமாக பார்த்ததில்லை. இங்கிலாந்து ரசிகர்கள் இந்த தொடருக்கு முன்பாக அவருடைய ஆட்டத்தை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது அவர் ஸ்பெஷலான திறமை கொண்ட இளம் வீரர்கள் என்பதை ரசிகர்கள் கண்டுள்ளனர். அவரிடம் ரன்களுக்கான பசி இருக்கிறது”

- Advertisement -

“இதுவரை அவர் அடித்துள்ள 3 சதங்களும் 150 ரன்களுக்கும் மேல் இருக்கிறது. அதில் 2 இரட்டை சதங்கள். பந்தை நீண்ட தூரத்திற்கு அடிக்கும் நவீன டி20 வீரரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தன்னுடைய டெக்னிக்கை உட்படுத்திக் கொண்டுள்ளார். எனவே நன்றாக அடிக்கும் போது அவரிடம் அனைத்து ஷாட்டுகளும் இருக்கிறது. குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பவுலருக்கு எதிராக அலட்சியமாக அவர் 3 தொடர்ச்சியான சிக்சர்களை அடித்தார்”

இதையும் படிங்க: பிஸி ப்ளேயரான அவரை பாத்தா சச்சின் தான் நியாபகத்து வருது.. இளம் வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி

“எனவே மிகவும் ஆபத்தான வீரரான அவரை எப்படி விரைவாக அவுட்டாக்கலாம் என்பதில் இங்கிலாந்து வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் நான்காவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியிலும் வென்று ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement