பிஸி ப்ளேயரான அவரை பாத்தா சச்சின் தான் நியாபகத்து வருது.. இளம் வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி

Ravi Shastri 3
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்றது. குறிப்பாக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து 2 – 1* என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா போன்ற மற்ற வீரர்கள் தடுமாறும் போது 22 வயதாகும் ஜெய்ஸ்வால் அட்டகாசமாக விளையாடி 545* ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக விசாகப்பட்டினத்தில் 209 ரன்கள் அடித்த அவர் ராஜ்கோட்டில் 214* ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

சச்சின் மாதிரி:
இந்நிலையில் பேட்டிங்கை தாண்டி பகுதி நேர பவுலராக செயல்படுவது, துடிதுடிப்பாக ஃபீல்டிங் செய்வது போன்றவற்றால் களத்தில் மிகவும் பிஸியான வீரராக ஜெய்ஸ்வால் செயல்படுவதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். அந்த வகையில் விளையாடும் ஜெய்ஸ்வாலை பார்க்கும் போது தமக்கு சிறு வயது சச்சின் நினைவுக்கு வருவதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“ஜெயிஸ்வால் விளையாடிய விதம் என்னை கவர்கிறது. பேட்டிங் மட்டுமின்றி களத்தில் அவருடைய செயல்பாடுகளும் நன்றாக இருக்கிறது. வருங்காலங்களில் ரோஹித் சர்மாவின் முதன்மை பகுதி நேர பவுலராக அவர் இருப்பார் என்று நினைக்கிறேன். லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் அல்லது மித வேகமாக என வகையாக இருந்தாலும் வருங்காலத்தில் அவருடைய கையில் பந்து இருக்கும். ஜெய்ஸ்வால் எனக்கு இளம் டெண்டுல்கரை நினைவுபடுத்துகிறார்”

- Advertisement -

“அனைத்து நேரமும் பிஸியாக செயல்படும் அவர் உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் கண்டிப்பாக வெற்றிக்கான நம்பிக்கை இருக்கும் என்று சொல்வதற்கான எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அசாத்தியம் என்று எதுவுமில்லை என்பதில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். குறிப்பாக ஜோ ரூட் கேட்ச்சை அவர் அபாரமாக படித்தார். அது அவுட் சைட் எட்ஜ் கிடையாது”

இதையும் படிங்க: அம்மா கொடுத்த சின்ன ஐடியா.. கேரியரையே மாதிடுச்சு.. ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்த அஸ்வின் அப்பா

“அவர் கேட்ச் பிடித்ததை பார்க்கும் போது எளிதாக தெரியலாம். அதில் முழுமையான ஈடுபாடு வேண்டும். இந்த தொடரில் அவர் சில அற்புதமான கருத்துக்களை பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க தொடரிலும் அவர் ஸ்லிப் பகுதியில் சில அபாரமான கேட்ச்களை பிடித்தார். ஆரம்ப காலங்களில் எளிமையான பகுதியில் வாழ்ந்த அவர் பகுதி நேர வேலை செய்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவருடைய கதை நம்ப முடியாதது. இது போன்ற கதைகள் தான் கிரிக்கெட்டின் அழகை வரையறுக்கிறது” என்று கூறினார்.

Advertisement