அம்மா கொடுத்த சின்ன ஐடியா.. கேரியரையே மாதிடுச்சு.. ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்த அஸ்வின் அப்பா

R Ashwin Family
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் அப்போட்டியில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்தியராக சாதனை படைத்தார்.

சொல்லப்போனால் 184 இன்னிங்ஸில் 500 விக்கெட்டுகளை எடுத்த அவர் அனில் கும்ப்ளேவை முந்தி டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராகவும் சாதனை படைத்தார். அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான வரலாற்றையும் அஸ்வின் படைத்துள்ளார்.

- Advertisement -

அம்மாவின் ஐடியா:
முன்னதாக ஆரம்ப காலங்களில் ஓப்பனிங் பேட்ஸ்மனாக விளையாடிய அஸ்வின் பின்னர் பவுலராக மாறியதை பற்றி அனைவரும் அறிவோம். இருப்பினும் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளராக விளையாட துவங்கிய அஸ்வின் முழங்கால் வலியை சந்தித்ததாக அவருடைய அப்பா ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

அப்போது “நீ ஏன் வேகமாக ஓடி பந்து வீச வேண்டும்? சில அடிகள் நடந்து சென்று ஸ்பின்னராக விளையாடு” என அம்மா சித்ரா கொடுத்த ஐடியா தான் நாளடைவில் அஸ்வின் சுழல் பந்து வீச்சாளராக உருவெடுப்பதற்கான விதையை போட்டதாக ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “தன்னுடைய பவுலிங்கை ஆஃப் ஸ்பின்னாக மாற்றியதே அஸ்வினின் கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது”

- Advertisement -

“அந்த முடிவுக்கு என்னுடைய மனைவி சித்ராவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அந்த காலகட்டங்களில் லேசான மூச்சு திணறலால் தடுமாறிய அஸ்வினுக்கு முழங்காலில் பிரச்சனை இருந்தது. எனவே மித வேகப்பந்து வீச்சாளராக செயல்பட முயற்சித்தது அவருக்கு நிரூபிக்க வேண்டிய சவாலாக இருந்தது. அப்போது சித்ரா தான் “ஏன் நீ அதிகமாக ஓடுகிறாய். சில அடிகள் வைத்து சுழல் பந்து வீசு” என்று சொன்னார்”

இதையும் படிங்க: ரோஹித்தை விட தோனி சிறந்த ஐபிஎல் கேப்டன்.. ரோஹித்தால் முடியாததையும் தோனி செய்வாரு.. ஹைடன், டாம் மூடி

“தற்போது அஸ்வினிடம் பேசிய போது 500 விக்கெட்டுகளை எடுத்தது உலகமாக அவருக்கு தெரியவில்லை என்பது போல எனக்கு தோன்றியது. கண்டிப்பாக அது பெரிய சாதனையாகும். ஆனால் அது அனைத்தும் கிடையாது. ஆம் அதுவும் ஒரு சாதனை” என்று கூறினார். அந்த வகையில் தம்முடைய கேரியரை மாற்றிய அம்மாவுக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ராஜ்கோட் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அஸ்வின் மீண்டும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement