TNPL 2023 : நடராஜன் போராட்டம் வீண், கேப்டனாக முதல் போட்டியிலேயே திருச்சியை சுருட்டிய அஸ்வின் – திண்டுக்கல் வென்றது எப்படி?

- Advertisement -

தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் டிஎன்பிஎல் 2022 டி20 தொடரில் ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற 3வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி ஆகிய அணிகள் மோதின. கோயம்புத்தூரில் இருக்கும் எஸ்என்ஆர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை களமிறங்கிய அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே ஜாபர் ஜமால் 4 (3) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த அக்சய் ஸ்ரீனிவாசன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதனால் 7/2 என தடுமாறி அந்த அணியை ஒருபுறம் மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரீதர் ராஜூ நிதானமாக விளையாடி காப்பாற்ற முயன்ற போதிலும் எதிர்ப்புறம் வந்த ஃபெராரிரோவை கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 (7) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு மணி பாரதி 2 (10) ஷாஜகான் 13 (18) ஆண்டனி தாஸ் 0 (1) அலெக்சாண்டர் 4 (6) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றொரு தமிழக நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால சுழலில் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

- Advertisement -

அசத்திய திண்டுக்கல்:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து போராடிய ஸ்ரீதர் ராஜு 4 பவுண்டரி 2 சிக்சருடன் 48 (41) ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட ராஜ்குமார் 1 பவுண்டரியும் 4 சிக்சர்களையும் தெறிக்க விட்டு 39 (22) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்த போதிலும் 19.1 ஓவரிலேயே திருச்சியை வெறும் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், சரவணகுமார் மற்றும் சுபோத் பாத்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 121 ரன்களை துரத்திய திண்டுக்கல்லுக்கு முதல் ஓவரிலேயே சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் நடராஜன் வீசிய கடைசி பந்தில் விமல் குமார் டக் அவுட்டாகி சென்றார். இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய பாபா இந்திரஜித் (23) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடியாக 6 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட சிவம் சிங் 46 (30) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நல்ல தொடக்கத்துடன் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி அடுத்து வந்த ஆதித்யா கணேஷ் 20* (21) ரன்களும் சுபோத் பாட்டி 2 சிக்சருடன் 19* (8) ரன்களும் எடுத்ததால் 14.5 ஓவரிலேயே 122/4 ரன்களை எடுத்த திண்டுக்கல் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய திருச்சிக்கு நம்பிக்கை நட்சத்திரம் நடராஜன் 3 ஓவரில் வெறும் 15 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்து போராடியும் வெற்றி காண முடியவில்லை.

அதே போல சிலம்பரசன், அலெக்சாண்டர், ஆண்டனி தாஸ் ஆகியோரும் தலா 1 விக்கெட் எடுத்தும் தோல்வியை சந்தித்த திருச்சி இத்தொடரை தோல்வியுடன் துவக்கியுள்ளது. அதை விட சமீபத்தில் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் லண்டனிலிருந்து திரும்பியதும் இந்த போட்டியில் திண்டுக்கல் அணியை கேப்டனாக வழி நடத்தினார்.

இதையும் படிங்க:தொடர்ந்து இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்படும் வீரர். ஓய்வை அறிவித்துவிட்டு – வெளிநாட்டு அணியில் விளையாட முடிவு

அதில் கேப்டனுக்கு அடையாளமாக 4 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 26 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் தன்னை நம்பர் ஒன் சாம்பியன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்தார். இருப்பினும் 4 ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement