தொடர்ந்து இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்படும் வீரர். ஓய்வை அறிவித்துவிட்டு – வெளிநாட்டு அணியில் விளையாட முடிவு

IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடி 209 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி மீண்டும் ஒருமுறை தோல்வியை தழுவியுள்ளது. அடுத்ததாக மூன்றாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த இந்திய அணியில் இடம்பெறாத ஒரு வீரரின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதால் அவர் இந்திய அணியில் இருந்து ஓய்வினை அறிவிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Saini 1

- Advertisement -

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி விரைவில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய நவ்தீப் சைனி அதே ஆண்டு இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினார். இதுவரை இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதோடு கடந்த 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகமான அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனாலும் அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் போது இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவரால் இந்திய அணிக்கு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் அவர் ஓய்வை அறிவித்தால் தான் வெளிநாட்டு அணியில் இடம் பிடித்து விளையாட முடியும்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த உண்முக்த் சந்த் அமெரிக்காவில் குடி பெயர்ந்து அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் வேளையில் அதே போன்ற முடிவை நவ்தீப் சைனி எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அவர் அமெரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் ஏதாவது ஒரு அணியை தேர்வு செய்து அங்கு குடிபெயர்ந்து கிரிக்கெட் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் இனிமே ஜடேஜா இடத்தை பிடிக்கப்போவது இவர்தான் – வெளியாக இருக்கும் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க தற்போது பலமான போட்டி நிலவி வருவதால் ஒரு சிலருக்கு மட்டுமே தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் வேளையில் ஒரு சில வீரர்கள் இதுபோன்ற முடிவை எடுத்து வெளியேறுவது வாடிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement