டி20 கிரிக்கெட்டில் இனிமே ஜடேஜா இடத்தை பிடிக்கப்போவது இவர்தான் – வெளியாக இருக்கும் அறிவிப்பு

Ravindra-Jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த கையோடு நாடு திரும்பியுள்ளது. அதற்கு அடுத்து ஒரு மாதம் ஓய்வு எடுத்துக் கொள்ளவுள்ள இந்திய அணி வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

jadeja 1

- Advertisement -

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களை வைத்து ஒரு வலுவான அணியை கட்டமைக்க பிசிசிஐ கவனத்தைச் செலுத்தி வருகிறது.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் அப்படி டி20 கிரிக்கெட்டில் மாற்றுவீரர்கள் அறிவிக்கப்பட இருக்கும் வேளையில் இனி டி20 கிரிக்கெட்டில் ஜடேஜாவின் இடத்தை அக்சர் பட்டேல் தான் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

axar patel

ஏனெனில் 34 வயதான ஜடேஜா இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் விளையாடும் அளவிற்கு பிட்டாக இருப்பார். அதே வேளையில் 29 வயதான அக்சர் பட்டேல் கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் நல்ல முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அதோடு பந்துவீச்சிலும் அவர் சிறப்பாக செயல்பட கூடியவர் என்பதனால் நிச்சயம் ஜடேஜாவின் இடத்தை அவரே நிரந்தரமாக பூர்த்தி செய்வார் என்றும் இந்திய அணியின் நிர்வாகம் இனி அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை டி20 கிரிக்கெட்டில் வழங்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வீரர்கள் பாவம் என்ன செய்வாங்க? உலக கோப்பை வெல்லும் முடிவு உங்க கைல தான் இருக்கு – பிசிசிஐ’யை தாக்கிய சாஸ்திரி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போது நிச்சயம் அக்சர் பட்டேல் ஜடேஜாவின் இடத்தில் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement