வீரர்கள் பாவம் என்ன செய்வாங்க? உலக கோப்பை வெல்லும் முடிவு உங்க கைல தான் இருக்கு – பிசிசிஐ’யை தாக்கிய சாஸ்திரி

Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாத இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அந்த தோல்விக்கு ஆரம்பத்திலேயே கிடைத்த டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாத கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருக்கும் ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காதது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அது போக நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்வியை கொடுத்தது. ஆனால் இவை அனைத்தையும் விட ஐபிஎல் தொடர் தான் இந்த தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். ஏனெனில் சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் விளையாட பழகிய இந்திய அணியினர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்தில் திணறுவது காலம் காலமாக அரங்கேறி வருகிறது.

சாஸ்திரி கோரிக்கை:
எனவே அடிக்கடி மாறக்கூடிய இங்கிலாந்து வானிலையை புரிந்து கொண்டு சமாளிக்க முன்கூட்டியே பயணித்து சில பயிற்சி போட்டிகளில் விளையாடி முழுமையாக தயாராவது அவசியமாகும். ஆனால் 2021ஆம் ஆண்டு தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு 10 நாட்கள் முன்பாக இங்கிலாந்துக்கு பயணித்து வலைப்பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு நேரடியாக ஃபைனலில் களமிறங்கினர். மறுபுறம் ஒரு மாதம் முன்பாகவே பயணித்து இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வென்று முழுமையாக தயாராகி களமிறங்கிய கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து எளிதாக ஃபைனலில் வென்றது.

WTC

அந்த நிலையில் இம்முறையும் அதிலிருந்து பாடத்தை கற்காத இந்திய அணியினர் அதே தவறை செய்தனர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் 4 ஓவர்கள் மட்டும் வீசிய இந்திய பவுலர்கள் முழுமையாக தயாராமல் நேரடியாக ஃபைனலில் களமிறங்கி ஒரே நாளில் 17 ஓவர்கள் வரை சோர்வுடன் வீசி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை வாரி வழங்கிய போதே தோல்வி உறுதியானது. அதனால் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்றால் ஒன்று ஐபிஎல் தொடரை தள்ளி வைக்க வேண்டும் அல்லது வீரர்களுக்கு போதிய நேரம் கொடுக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பிசிசிஐயை கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் கோடிகளை கொடுக்கும் ஐபிஎல் தொடரை தள்ளி வைக்க மாட்டார்கள் என்ற நிலையில் குறைந்தபட்சம் ஃபைனலுக்கு முன்பாக 20 நாட்கள் தயாராக அவகாசம் கொடுத்தால் மட்டுமே வெற்றி காண முடியும் என்று தெரிவிக்கும் அவர் வீரர்களை மட்டும் குறை சொல்லி அர்த்தமில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அடுத்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது பிசிசிஐ கையில் தான் இருக்கிறது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

MI - Ravi Shastri

“அது நிச்சயமாக நடைபெறப் போவதில்லை என்பதால் எதார்த்தத்தை பாருங்கள். அதாவது நீங்கள் 20 நாட்கள் முன்பாகவே தயாராக வேண்டும். ஆனால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நீங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலைமை ஏற்படும். எனவே இரண்டில் எதை தேர்ந்தெடுக்கலாம் என்பது உங்களுடைய விருப்பமாகும். அந்த முடிவு வாரியத்தை பொருத்தது”

இதையும் படிங்க:2019 ஆம் ஆண்டு உலககோப்பை அணியில் என்னை தேர்வு செய்யாததுக்கு காரணமே அவர்தான் – ராயுடு பேட்டி

“இருப்பினும் வருங்காலத்தில் இதை பிசிசிஐ மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன். அதாவது ஐபிஎல் தொடருக்குப்பின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரப்போகிறது என்றால் அதற்கு இந்திய அணி தகுதி பெற்றால் அதில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு தேவையான நேரத்தை கொடுக்க அணி உரிமையாளர்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement