2019 ஆம் ஆண்டு உலககோப்பை அணியில் என்னை தேர்வு செய்யாததுக்கு காரணமே அவர்தான் – ராயுடு பேட்டி

Rayudu
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரண்களை குவித்த 12-வது வீரராக திகழ்கிறார். ஐபிஎல் தொடரில் இதுவரை 4329 ரன்களை குவித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக 2018-ம் ஆண்டு வாக்கில் இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதன்காரணமாக அம்பத்தி ராயுடு நிச்சயம் 2019-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நம்பர் நான்காவது இடத்தில் விளையாட அவரை தவிர்த்து விஜய் சங்கர் 3டி வீரராக அணியில் சேர்க்கப்பட்டார்.

அப்போது அந்த விவகாரம் அனைவரது மத்தியிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதோடு அம்பத்தி ராயுடு அந்த உலகக் கோப்பை போட்டிகளை 3டி கிளாஸ் அணிந்து காண இருக்கிறேன் என்று தேர்வுக்குழுவை விமர்சிக்கும் வகையில் ட்விட்டர் பதிவை வெளியிட்டதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையும் வெளியிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்று விளையாடிய அவர் தனது ஆறாவது கோப்பையுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்து விடை பெற்றார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணியில் தான் தவிர்க்கப்பட்டது குறித்து பேசியுள்ள அம்பத்தி ராயுடு கூறுகையில் : இந்திய அணியின் தேர்வுக்குழுவில் இருந்த ஒருவருடன் நான் எனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் விளையாடி இருக்கிறேன். அவருக்கும் எனக்கும் நாங்கள் விளையாடிய காலகட்டத்தில் சில வார்த்தை மோதல்கள் இருந்தன. அவரே அதை காரணமாக வைத்து என்னை அணியிலிருந்து நீக்கி இருக்கலாம் என்று ராயுடு கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தங்கத்தை தகரம்ன்னு நினைச்சுட்டிங்க, ஐசிசி கொடுத்த பெரிய அங்கீகாரத்துடன் – டிஎன்பிஎஸ் தொடரில் அஸ்வின்

ஆனால் அந்த தேர்வுக்குழு உறுப்பினர் யார் என்ற தகவலையும் அவரது பெயரையும் அவர் சொல்லவில்லை. எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தான் 2019-ஆம் ஆண்டு அம்பத்தி ராயுடுவை அணியிலிருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement