தங்கத்தை தகரம்ன்னு நினைச்சுட்டிங்க, ஐசிசி கொடுத்த பெரிய அங்கீகாரத்துடன் – டிஎன்பிஎஸ் தொடரில் அஸ்வின்

Ravichandran Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் கொஞ்சமும் முன்னேறாமல் இம்முறை ஆஸ்திரேலியாவிடம் அதை விட மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்கும் அதை சரியாக பயன்படுத்த தவறிய இந்திய அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய சோர்வுடன் பந்து வீசிய பவுலர்கள் முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அத்துடன் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக போற்றப்படும் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் அழுத்தம் நிறைந்த ஃபைனலில் அரைசதம் கூட அடிக்காமல் சொதப்பியது தோல்வியை கொடுத்தது. அதை விட ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய பவுலராக சாதனை படைத்துள்ள அஷ்வினை ஆஸ்திரேலியா பேட்டிங் வரிசையில் 5 பேர் இடது கை வீரர்களாக இருந்தும் ஏன் தேர்வு செய்யவில்லை என்பது எனக்கு புரியவில்லை என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

தங்கத்தை தகரமென:
அது மட்டுமின்றி ஏற்கனவே 5 சதங்களை அடித்து ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையிலும் ஜடேஜாவுக்கு பின் அஸ்வின் 2வது இடத்தில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் 2019 – 2021, 2021 – 2023 ஆகிய 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் அஸ்வின் தான் அதிக விக்கெட் எடுத்த பவுலராக சாதனை படைத்துள்ளார். பொதுவாக உலகில் உள்ள அனைத்து அணிகளிலும் தங்களது நாட்டில் ஐசிசி தரவரிசையில் டாப் இடங்களில் இருக்கும் வீரர்களை ஃபைனலில் முதல் ஆளாக தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனாலும் உலகின் நம்பர் ஒன் பவுலரான் அஷ்வினை கூல்டிரிங்ஸ் தூக்குபவராக பயன்படுத்திய பெருமை இந்தியாவுக்கு மட்டுமே சேரும் என்றே சொல்லலாம். அதன் பரிசாக இந்திய அணிக்கு ஃபைனலில் மாபெரும் தோல்வி கிடைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் சொல்லலாம். இந்நிலையில் இந்த ஃபைனலுக்கு பின் அப்டேட் செய்யப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஃபைனலில் விளையாடாத போதிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 860 புள்ளிகளுடன் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் நிலையில் 2வது இடத்தில் இங்கிலாந்தின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் 850 புள்ளிகளுடன் உள்ளார்.

- Advertisement -

அவரைத் தவிர்த்து இந்தியா சார்பில் டாப் 10 பட்டியலில் பும்ரா 8வது இடத்திலும் ரவீந்திர ஜடேஜா 9வது இடத்திலும் இருக்கின்றனர். அதே போல பேட்டிங் தரவரிசையில் இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் மட்டுமே இப்போதும் 10வது இடத்தில் இருக்கிறார். மேலும் சாம்பியன் பட்டம் என்ற ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் டாப் 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் டாப் 2 இடங்களைப் பிடித்துள்ள நிலையில் அக்சர் பட்டேல் 4வது இடத்தில் இருக்கிறார். அணிகள் தரவரிசையில் ஃபைனலில் தோற்றாலும் பெருமைக்கு குறையில்லாமல் தொடர்ந்து இந்தியா 121 புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க:39 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்திய அற்புதமான சாதனை – விவரம் இதோ

மொத்தத்தில் தகரம் என்று இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபைனலில் விளையாட விட்டாலும் நம்பர் ஒன் தங்கமான டெஸ்ட் பவுலர் என்ற அங்கீகாரத்தை ஐசிசி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து ரோஹித், விராட் போன்றவர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் தமிழகத்தில் கோலாகலமாக துவங்கியுள்ள டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாட அஸ்வின் விளையாட தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement