39 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்திய அற்புதமான சாதனை – விவரம் இதோ

Travis-Head
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களின் முடிவில் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்த பின்னர் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Shardul-Thakur

- Advertisement -

அந்த வகையில் இந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதி போட்டியில் சதம் அடித்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேபோன்று முதல் இன்னிங்ஸில் அவருடன் இணைந்து சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் 885 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். அதேபோன்று இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மார்னஸ் லாபுஷேன் 903 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

Travis Head

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி கடந்த 39 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மாபெரும் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் மூன்று வீரர்களுமே ஒரே அணியை சேர்ந்த வீரர்களாக இருப்பதே அந்த சாதனை.

- Advertisement -

இதற்கு முன்னதாக 1984 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த 3 பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடத்தில் இருந்தனர். அதனை தொடர்ந்து 39 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த இந்த மூவரும் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இதையும் படிங்க : 2 டஜனுக்கு மேல் உலககோப்பைகளை வென்று புதிய உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா – மொத்த கோப்பைகளின் லிஸ்ட் இதோ

இந்திய அணி சார்பாக ரிஷப் பண்ட் பத்தாவது இடத்திலும், ரஹானே 37-வது இடத்திலும் உள்ளனர். அவர்களை தவிர்த்து பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement