அவருக்கு பதிலா 2023 உ.கோ அணியில் அஷ்வின் செலக்ட்டான ஆச்சர்யப்படாதீங்க.. ஆசிய கோப்பை வென்ற பின்.. ரோஹித் சூசகம்

Ravichandran Ashwin Rohit Sharma.jpeg
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நிறைய பரபரப்பான போட்டிகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவு பெற்று ரசிகர்களை மகிழ்வித்தது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் இலங்கையை செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8வது முறையாக கோப்பையை வென்று வெற்றிகரமான ஆசிய அணி என்ற சாதனை படைத்தது.

விரைவில் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடரில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சூழ்நிலையில் கே ல் ராகுல், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து இத்தொடரில் களமிறங்கி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியது இந்திய அணிக்கு பலமாகவும் அமைந்துள்ளது.

- Advertisement -

ரோஹித் மறைமுகம்:
முன்னதாக இத்தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அக்சர் படேல் காயமடைந்து வெளியேறியதால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆசிய கோப்பையில் தேர்வாகி ஃபைனலில் நேரடியாக களமிறங்கும் வாய்ப்பையும் பெற்றார். குறிப்பாக ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய இருவருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருப்பதால் ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற சூழ்நிலையில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டிருப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் 2023 உலக கோப்பைக்கு முன்பாக அக்சர் படேல் காயத்திலிருந்து குணமடையாமல் போகும் பட்சத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஆசிய கோப்பை வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பொறுத்த வரை அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதைப் பற்றி அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன். எனவே அவரும் இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான வரிசையில் இருக்கிறார். அதே போலவே வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார். குறிப்பாக நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்தும் வேலை செய்பவர்களை விரும்புகிறோம்”

இதையும் படிங்க: 2 – 0 என சரிந்தும் கொதிதெழுந்த தென்னாப்ரிக்கா – ஆஸிக்கு வரலாறு காணாத தோல்வியை பரிசளித்து.. உலக சாதனை வெற்றி

“மேலும் அக்சர் படேல் திடீரென காயத்தை சந்தித்ததால் நாங்கள் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்தோம். பெங்களூருவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சியில் இருந்த அவர் ஃபிட்டாக இருப்பதால் நாங்கள் உடனடியாக அழைத்தோம்” என்று கூறினார். அதற்கேற்றார் போல் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு நாளை அழைத்தால் கூட தாம் 100% தயாராக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். எனவே சொந்த மண்ணில் அனுபவமிக்க அவர் தேர்வு செய்யப்பட்டால் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement