ரசிகர்களின் கிண்டலை உடைச்ச அவர் தான் 2023 உ.கோ ஸ்டேண்ட் அவுட் பிளேயர்.. அஸ்வின் பாராட்டு

Ravichandran Ashwin 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் 2011 போல இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. குறிப்பாக லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து மிரட்டிய இந்தியா முக்கியமான இறுதிப் போட்டியில் பேட்டியில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது.

இருப்பினும் 765 ரன்கள் குவித்து உலக சாதனையுடன் தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி, அதிரடியாக விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் நல்ல துவக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா, 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்து வரலாற்று சாதனை படைத்த முகமது ஷமி போன்ற இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். அந்த வகையில் பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாத அணிகளுக்கு மத்தியில் ஃபைனல் வரை சென்ற இந்தியா ரசிகர்களை பெருமைப்படுத்தும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் தம்மை பொறுத்த வரை ஸ்ரேயாஸ் ஐயர் தான் ஸ்டேண்ட் அவுட் பிளேயராக விளையாடியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறுவதால் அணியிலிருந்து நீக்குமாறு நிறைய ரசிகர்கள் விமர்சனங்களும் கிண்டல்களும் செய்த நிலையில் கடினமான பயிற்சிகளை எடுத்த ஸ்ரேயாஸ் கடைசியில் அதே பந்துகளில் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் அடித்து தம்முடைய தரத்தை நிரூபித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்பின்னர்களை இறங்கி வந்து அதிரடியாக எதிர்கொள்வது ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்பெஷலாகும். அவர் இத்தொடரில் ஸ்டேண்ட் அவுட் பிளேயராக செயல்பட்டார். மகத்துவத்தை துரத்துவது விளையாட்டில் ஒரு அரிய பொருள். பொதுவாக யாராவது ஒருவர் தனித்துவமாக எதையாவது செய்தால் மக்கள் அதை பாராட்டுவதற்கு பதிலாக அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள்”

- Advertisement -

“அந்த வகையில் ஸ்ரேயாஸை ஷார்ட் பந்துகளை தவிர்க்குமாறு அனைவரும் சொன்னார்கள். ஆனால் அவர் கடினமான பயிற்சிகளை செய்து கடைசியில் அதே பந்துகளில் நேராக பவுண்டரிகளும் சிக்சர்களும் அடித்தார். அந்த வகையில் அவர் மகத்துவத்தை சேசிங் செய்வது எனக்கு பிடித்துள்ளது. அவர் தற்போது ஃபுல் ஷாட்களை சிறப்பாக எதிர்கொள்வதில் வேலை செய்துள்ளார். தற்போது அந்த பந்துகளை பெரும்பாலும் அவர் பவுண்டரிக்கு அனுப்புகிறார்”

இதையும் படிங்க: இப்படி சொல்றதுக்கு சாரி.. இன்றைய இந்திய வீரர்களால் அதை சாதிக்க முடியல.. கபில் தேவ் அதிருப்தி

“குறிப்பாக மிட் விக்கெட், ஸ்கொயர் திசையில் அடிக்கும் அவர் அந்த பந்துகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதை காண்பிக்கிறார். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை மிட் ஆப் திசைக்கு மேலே அவர் அடிப்பதை பார்க்கும் போது ஒரு சாம்பியன் பேட்ஸ்மேன் இந்தியாவுக்கு முன்னேறி வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது” என்று கூறினார்.

Advertisement