2வது போட்டியில் இங்கிலாந்தின் பஸ்பாலுக்கு உண்மையான பாலை காட்டியது அவர் தான்.. அஸ்வின் பாராட்டு

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பரபரப்பாக தூங்கியுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் சுதாரித்து செயல்பட்ட இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்தது. அதனால் சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக எங்களை வீழ்த்த முடியாது என்பதையும் இந்திய அணி நிரூபித்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடந்த அப்போட்டியில் யசஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் அடிக்காத போது 209 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் இக்கட்டான சூழ்நிலையில் 104 ரன்கள் அடித்த சுப்மன் கில் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
ஆனால் அவர்களை விட ஃபிளாட்டான பிட்ச்சில் தேவைப்படும் நேரங்களில் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த ஜஸ்பிரித் பும்ரா மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்ததால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதிலும் துல்லியமான யார்கர் பந்தால் ஓலி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை அவர் கிளீன் போல்டாக்கிய விதம் எதிரணியினரையும் கைதட்டி பாராட்ட வைத்தது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் பஸ்பாலுக்கு பும்ரா பூம்பாலை காட்டி இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் வேடிக்கையாக பாராட்டியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே உண்மையாக காட்சியை திருடியவர் பூம்பால். ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்து வீசினார். இத்தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராகவும் முன்னேறியுள்ளார்”

- Advertisement -

“அவருக்கும் அவருடைய இந்த இமாலய சாதனைக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். அதே போல சுப்மன் கில் நல்ல திறமையை கொண்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அடித்த சதம் பேட்ஸ்மேனாக தம்மிடம் உள்ள கவசத்தை அவர் நியாயப்படுத்தினார். வெற்றி கேள்விக்குறியாக இருந்த சமயத்தில் நாங்கள் நான்காவது நாளில் விளையாட வந்தோம்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் இளம் புயல் சமர் ஜோசப்.. வாங்கிய அணி என்ன? முழுவிவரம்

“ஆனால் எங்களுடைய எண்ண அலைகள் எனர்ஜி மற்றும் செயல்பாடுகள் ஆகியவை 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய உதவியது. 2005இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து விளையாடிய விதம் ஆர்வமாக இருந்தது. அதை நான் பின்பற்றினேன். தற்போது அதே போல இந்த தொடரும் அமையும் என்று எனக்கு ஒரு உணர்வு தோன்றுகிறது” என கூறினார். அந்த வகையில் தற்போது ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் உமரா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement