ஐபிஎல் 2024 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் இளம் புயல் சமர் ஜோசப்.. வாங்கிய அணி என்ன? முழுவிவரம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. அதில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதற்காக கடந்த டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி முடித்ததை ரசிகர்கள் அறிவோம்.

இந்நிலையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 2024 ஐபிஎல் தொடரில் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய அவருக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் சமர்:
அந்த வகையில் காயத்தை சந்திக்காத போதிலும் அவர் எதற்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் என்று விவரம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த சீசனிலிருந்து வெளியேறியுள்ள அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சமர் ஜோசப் தங்களுடைய அணிக்காக 3 கோடிக்கு வாங்கப்படுவதாக லக்னோ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் மொத்தம் 13 விக்கெட்டுகள் எடுத்து முதல் தொடரிலேயே தொடர்நாயகன் விருது வென்று அனைவரது கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக வெறும் 24 வயது மட்டுமே நிரம்பிய அவர் புகழ்பெற்ற பிரஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் போது மிட்சேல் ஸ்டார்க் வீசிய யார்கர் பந்தால் பாதத்தில் பெரிய காயத்தை சந்தித்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

- Advertisement -

அதனால் விளையாட மாட்டார் என்று கருதப்பட்ட அவர் முதலுதவிகளை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் வெறித்தனமான வேகத்தில் பந்து வீசி 7 விக்கெட்டுகள் சாய்த்து ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோற்கடிக்க உதவினார். அதன் காரணமாக 29 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 35 வருடங்கள் கழித்து காபா மைதானத்தில் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது.

இதையும் படிங்க: கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதற்கு இதுவே காரணம் – வெளியான தகவல்

அந்த வெற்றிக்கு காயத்தையும் பொருட்படுத்தாமல் வெறித்தனமாக பந்து வீசி வெற்றியை பெற்று கொடுத்த சமர் ஜோசப் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த அவர் செக்யூரிட்டி வேலை செய்து கடுமையாக போராடி கிரிக்கெட்டில் காலடி வைத்துள்ளார். அதில் முதல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்டுள்ளதால் தற்போது உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடரில் அவருக்கு 3 கோடிக்கு விளையாட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement