கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதற்கு இதுவே காரணம் – வெளியான தகவல்

Shreyas
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தொடருக்கான கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி இன்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

- Advertisement -

மேலும் அவர் பார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டாரா? அல்லது காயம் காரணமாக வெளியேறினாரா? என்று தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இடம் பெற்ற அவர் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததார்.

இதன்காரணமாக அவரை இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற பேச்சுகள் அதிகளவில் இருந்து வந்தன. இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயருக்கு வலைப்பயிற்சியின் போது பேட்டிங் செய்கையில் முதுகுப்பகுதியில் வலி இருந்ததாகவும் அதேபோன்று தசைப்பிடிப்பும் இருந்ததாகவும் கூறப்பட்டது. எனவே மற்ற இந்திய வீரர்களின் கிட் பேக் விசாகப்பட்டினம் நகரில் இருந்து ராஜ்கோட் வந்தடைந்த வேளையில் ஷ்ரேயாஸ் ஐயரின் கிட் பேக் மட்டும் மும்பைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க : 2018இல் அவருக்கு செஞ்ச ஒரு ஃபோன்.. இந்திய கிரிக்கெட்டின் பவுலிங்கையே மாத்திடுச்சு.. ரவி சாஸ்திரி பெருமிதம்

இந்நிலையில் காயம் காரணமாகவே ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் விரைவில் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் அவர் அங்கு பயிற்சி மற்றும் சிகிச்சையும் மேற்கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement