3 நாள்ல ஏன் டெஸ்ட் மேட்ச்ச முடிக்கிறீங்க ரொம்ப கடுப்பாகுது – ரசிகரின் கேள்விக்கு அஷ்வின் கொடுத்த பதில் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. முன்னதாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அதற்காக ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சனங்களை வைத்து அஷ்வினுக்கு எதிராக அதிக கவனம் கொடுத்து பயிற்சிகளை செய்தது.

Nathan Lyon Pujara IND vs AUS

- Advertisement -

ஆனால் இறுதியில் வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறிய அந்த அணி நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 3வது நாளின் உணவு இடைவெளியில் 2வது இன்னிங்ஸை துவங்கி தேநீர் இடைவெளிக்குள் 2 மணி நேரத்தில் 91 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்யாசத்தில் படுதோல்வி சந்தித்தது. அதே போல டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் ஓரளவு தாக்குப் பிடித்தாலும் மீண்டும் 3வது நாளில் 2 மணி நேரத்துக்குள் மடமடவென்று வெறும் 114 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

கடுப்பில் ரசிகர்கள்:
மறுபுறம் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்ட இந்தியா ஆஸ்திரேலியாவின் பிட்ச் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி ஆரம்பத்திலே பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் இந்த 2 போட்டிகளுமே 3 நாட்களுக்குள் முடிந்தது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக தீவிர ரசிகர்கள் கடைசி 2 நாட்களில் மைதானத்திற்கு நேரில் சென்றும் தொலைக்காட்சியிலும் இந்தியாவின் போட்டியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

Ashwin

இந்நிலையில் 2வது போட்டியை முடித்துக்கொண்டு அடுத்த போட்டிக்கு முன் 8 நாள் இடைவெளி இருப்பதால் சென்னை திரும்பிய போது விமானத்தில் ஒரு ரசிகர் “ஏன் 3 நாட்களில் போட்டியை முடித்து விட்டீர்கள் அதனால் நான் ஏமாற்றத்தை சந்தித்தேன்” என்று கேட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அந்த ரசிகரின் கேள்விக்கு தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “விமானத்தில் நான் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு ரசிகர் என்னிடம் “ஏன் நீங்கள் டெஸ்ட் போட்டியை வெறும் 3 நாட்களுக்குள் முடித்து விடுகிறீர்கள்? அது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது” என்று கூறினார்”

- Advertisement -

“அதற்கு நான் “சார். தற்போது 2 விஷயங்கள் மாறியுள்ளன. ஒன்று கிரிக்கெட் வீரர்களின் மனநிலை. அதாவது இப்போதெல்லாம் அவர்கள் வேகமாக விளையாடி முடிவை காண விரும்புவதால் வேகமாக ரன்களை எடுக்க முயற்சிக்கிறார்கள். இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் முழுமையான நேரத்தை எடுத்துக்கொண்டு மெதுவாக ரன்கள் குவிப்பதை விரும்புவதில்லை. ஆனால் அதற்காக நாம் அந்த 2 வகையான அணுகு முறையையும் ஒப்பிட்டு எது சிறந்தது என்று சொல்ல முடியாது. மேலும் நாம் எந்த தலைமுறையையும் ஒப்பிட முடியாது. 2வது அந்த 2 போட்டிகளுமே 3 நாட்களுக்குள் முடிந்திருக்கக் கூடாது” என்று கூறினார்.

Ashwin

அதாவது தற்போதைய பேட்ஸ்மேன்கள் டி20 கிரிக்கெட்டில் விளையாடி அதிவேகமாக ரன்களை குவிக்க விரும்புவதால் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் உள்ள பிட்ச்களுக்கு மதிப்பு கொடுத்து விளையாடாமல் அதிரடியாக விளையாடுவதாலேயே விரைவாக விக்கெட்களை இழந்து விடுவதாக அஷ்வின் கூறியுள்ளார். அதன் காரணமாகவே தற்போதெல்லாம் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களுக்குள் முடிந்து விடுவதாக தெரிவிக்கும் அவர் நாங்களும் அந்த மாதிரியான போட்டிகளை விரும்புவதில்லை என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விராட் – ரோஹித் ஆகியோரில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த கேப்டன் யார்? ஹர்பஜன் கொடுத்த ரசிகர்கள் எதிர்பாராத பதில் இதோ

இதை தொடர்ந்து 2 – 0* (4) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இத்தொடரின் 3வது போட்டி இந்த ஊரில் வரும் மார்ச் 1ஆம் தேதியன்று நடைபெறுகிறது. அதிலும் வென்று ஆரம்பத்திலேயே இத்தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் இடத்தை தனதாக்கும் முயற்சியுடன் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement