முகமது ரிஸ்வான் அப்டி ரன் அவுட்டாக காரணம் என்ன தெரியுமா? முக்கிய பாய்ண்ட்டை சுட்டிக்காட்டிய சைன்டிஸ்ட் அஸ்வின்

Ravichandran Ashwin 7
- Advertisement -

எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்கியது. 2023 ஐசிசி உலகக் கோப்பை தயாராகும் பகுதியில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் நேபாள் அணியை பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து எதிர்பார்த்ததை போலவே நேபாள் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 50 ஓவர்களில் 342/6 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக அந்த அணிக்கு பக்கார் ஜமான் 14, இமாம் 5 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய முகமது ரிஸ்வான் 44 ரன்கள் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்று அசத்திய கேப்டன் பாபர் அசாம் 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 151 ரன்கள் குவித்தார். அவரை விட கடைசி நேரத்தில் சரவெடியாக விளையாடிய இப்திகார் அகமது 11 பவுண்டரி 4 சிக்சருடன் 109* (71) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிசிங் கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார்.

- Advertisement -

அஸ்வின் விளக்கம்:
முன்னதாக அப்போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த முகமது ரிஸ்வான் குறைந்த தூரத்தில் அடித்து விட்டு வேகமாக சிங்கிள் எடுக்க ஓடிய போது வித்தியாசமாக ரன் அவுட்டானதால் கிண்டல்களுக்குள்ளனர். குறிப்பாக வேகமாக ஓடி வெள்ளைக்கோட்டை நெருங்கிய அவர் தம்மை நோக்கி பந்து வருவதை பார்த்ததால் அதில் அடி வாங்கக்கூடாது என்பதற்காகவும் அதை தடுத்து விடக்கூடாது என்பதற்காகவும் ஓடிக்கொண்டிருந்த போதே பேட்டையும் தன்னுடைய காலையும் சற்று பின்னோக்கி இழுத்தார்.

ஆனால் அதற்குள் நேபாள் ஃபீல்டர் துல்லியமாக வீசியதால் கருணை காட்டாத பந்து வேகமாக ஸ்டம்பில் அடித்து அவரை ரன் அவுட்டாக்கியது. ஒருவேளை அந்த சமயத்தில் பந்தை பற்றி கவலைப்படாமல் வெள்ளைக்கோட்டை தொடர் முயற்சித்து இருந்தாலே அவர் எளிதாக ரன் அவுட்டிலிருந்து தப்பியிருக்கலாம் என்றே சொல்லலாம். இந்நிலையில் சாதாரணமாக டைவ் அடித்திருந்தாலே அந்த சமயத்தில் தப்பியிருக்கலாம் என்று தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஹெல்மெட் அணியாத காரணத்தாலேயே சற்று ஒதுங்கிய முகமது ரிஸ்வான் பரிதாபமாக ரன் அவுட்டானதாக கூறியுள்ளார்.

- Advertisement -

விரேந்தர் சேவாக் சயின்டிஸ்ட் என்றழைக்கும் அளவுக்கு கிரிக்கெட்டின் விதிமுறைகள் ஆழமாக பேசக்கூடிய அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பந்து எறியப்பட்ட உயரமே அதை தவிர்க்க முடியாமல் ரிஸ்வானை கடினமாக்கியது. ஆனால் பொதுவாக ரன் எடுக்க ஓடும் போது இது போன்ற சமயங்களில் டைவ் செய்தாலே போதுமானதாகும்”

இதையும் படிங்க: உலகக்கோப்பையில் இந்திய அணியை தோக்கடிக்க அந்த ஒரு டீமால மட்டும் தான் முடியும் – பிராட் ஹாக் கருத்து

“இருப்பினும் இது அவர் தன்னை காப்பாற்றுவதற்கு கவர் செய்யும் போது ஏற்பட்ட அரிய நிகழ்வாகும். மேலும் அவர் ஹெல்மெட் அணியவில்லை என்பதே இதற்கான காரணமாகும். ஆனால் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் செய்வதை விரும்பும் அவர் ஹெல்மெட் அணியாமல் விளையாடினார் என்பது அதை இன்னும் விநோதமாக மாற்றுகிறது” என்று கூறினார்.

Advertisement