உலகக்கோப்பையில் இந்திய அணியை தோக்கடிக்க அந்த ஒரு டீமால மட்டும் தான் முடியும் – பிராட் ஹாக் கருத்து

Brad-Hogg
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி எந்த ஒருநாள் உலகக்கோப்பையும் கைப்பற்றாத வேளையில் இம்முறை முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கே சாதகம் அதிகம் என்று கூறிவருகின்றனர்.

அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்த தொடரை முடித்த பின்னர் உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றும் இந்திய அணியை தோற்கடிக்க கூடிய ஒரே அணி என்றால் அது ஆஸ்திரேலிய அணி தான் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் கூறுகையில் :

எதிர்வரும் உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒன்று மட்டும் தான் இந்திய அணியை தோற்கடிக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய அணி அந்த அளவிற்கு மிகவும் நம்பிக்கையான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அஸ்தியுள்ளனர்.

- Advertisement -

அதோடு அவர்கள் கடந்த சில மாதங்களாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணிக்கு தான் அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதேபோன்று மற்ற அணிகளுக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் ரிஷப் பண்ட் இல்லை என்றாலும் கே.எல் ராகுல் அணிக்குள் வந்திருப்பது அவர்களுக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கும்.

இதையும் படிங்க : டெத் ஓவரில் நேபாள் துவம்சம் – விராட் கோலி, அம்லாவை முந்திய பாபர் அசாம் உலக சாதனை – ஆசிய கோப்பையிலும் புதிய வரலாற்று சாதனை

ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை ராகுலின் வருகை காரணமாக தற்போது மேலும் பலமடைந்துள்ளது. அதுமட்டுமின்றி பின் வரிசையிலும் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்ற பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டர்கள் இருப்பதினால் நிச்சயம் இந்திய அணி இந்த உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் என்று பிராட் ஹாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement