டெத் ஓவரில் நேபாள் துவம்சம் – விராட் கோலி, அம்லாவை முந்திய பாபர் அசாம் உலக சாதனை – ஆசிய கோப்பையிலும் புதிய வரலாற்று சாதனை

- Advertisement -

ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானின் முல்தான் நகரில் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்கியது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பகார் ஜமான் 14, இமாம் உல் ஹக் 5 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்

இருப்பினும் அடுத்ததாக வந்து நங்கூரமாக விளையாடிய கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய முகமது ரிஸ்வான் 44 ரன்கள் குவித்து சரிவை சரி செய்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த சால்மன் ஆஹா 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய பாபர் அசாம் மிகவும் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஒருநாள் கிரிக்கெட்டில் தம்முடைய 19வது சதத்தை அடித்தார்.

- Advertisement -

புதிய சாதனை:
அவருடன் அடுத்ததாக வந்த இப்திகார் அகமது கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக டெத் ஓவர்களில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் நேபாள் பவுலர்களை வெளுத்து வாங்கி பாபர் அசாமுக்கு நிகராக 11 பவுண்டரி 4 சிக்சருடன் 109* (71) ரன்கள் எடுத்தார். மறுபுறம் சீரான வேகத்தில் விளையாடிய பாபர் அசாம் தன்னுடைய பங்கிற்கு கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி 4 சிக்ஸருடன் 151 (131) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதனால் ஆரம்பத்தில் தடுமாறிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 342/6 ரன்கள் குவித்து மிரட்டியது. அந்தளவுக்கு கடைசி நேரத்தில் சுமாராக பந்து வீசிய நேபால் சார்பில் அதிகபட்சமாக சொம்பல் காமி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை விட இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 19 சதங்கள் அடித்த வீரர் என்ற வீரர் என்ற தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஹாசிம் அம்லாவின் சாதனையை உடைத்து பாபர் அசாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க:அப்ரிடி, ரவூப், நாசீம்ன்னு எத்தனை பேர் வந்தாலும் அவர் பாகிஸ்தானை சாய்ப்பாரு – நட்சத்திர வீரர் மீது முகமது கைப் உறுதி

குறிப்பாக ஹாசிம் அம்லா 104 இன்னிங்ஸில் 19 சதங்கள் அடித்திருந்த நிலையில் பாபர் அசாம் 104 இன்னிங்ஸில் 19 சதங்கள் அடித்து இந்த சாதனை படைத்துள்ளார். அத்துடன் 151 ரன்கள் குவித்து 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற விராட் கோலியின் ஆல் டைம் சாதனையையும் பாபர் அசாம் உடைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2014 ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக கேப்டனாக விராட் கோலி 136 ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அதே போல ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 150க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையும் பாபர் அசாம் பெற்றுள்ளார்.

Advertisement