எனக்கு ஸ்கெட்ச் போட்டாங்க ஆனா – ஆஸியை சாய்க்க ஸ்பெஷல் திட்டம் பற்றி அஷ்வின் பேட்டி (திட்ட வீடியோ)

Ravichandran Ashwin David Warner
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக உலகின் நம்பர் ஒன் அனியான ஆஸ்திரேலியாவை வெறும் 3 நாட்களில் சுருட்டிய இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது. முன்னதாக இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்தியா வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இறுதியில் அவை அனைத்தையும் வாயில் பேசாமல் செயலில் அபாரமாக செயல்பட்டு பொய்யாக்கிய இந்தியா ஆஸ்திரேலியாவின் முகத்தில் கரியை பூசி அசத்தலான வெற்றி பெற்று செயலால் பதிலடி கொடுத்துள்ளது. அப்படி பிட்ச் சலசலப்புக்கு மத்தியில் பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வினை திறம்பட எதிர்கொள்வதற்காக பிக்பேஷ் தொடரின் போதே தேவையான திட்டங்களை வகுத்து விட்டதாக மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர்.

- Advertisement -

மாறிய ஸ்கெட்ச்:
அதை விட அஷ்வினை சாய்ப்பதற்காக அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப்பிடித்து ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது உலக அளவில் வைரலானது. ஆனால் இறுதியில் அந்த அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கிய அஷ்வின் மொத்தமாக 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை போலவே அவர்களை சாய்ப்பதற்காக தாமும் இத்தொடருக்காக தம்முடைய பவுலிங் ஆக்சனில் மாற்றத்தை செய்துள்ளதாக ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார். ஆனால் இறுதியில் அந்தத் திட்டத்திற்கு அவசியம் ஏற்படாத அளவுக்கு ஆஸ்திரேலியா போராடாமலே தோற்று விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி முதல் போட்டிக்கு பின் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த நபர் (மகேஷ் பிதியா) நீண்ட காலமாகி விட்டார் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் இந்த தொடருக்காக நான் எனது ஆக்சனை மாற்றியுள்ளேன். ஆனால் இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா எவ்வாறு தயாராகிறது என்பதற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை. பொதுவாக எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அத்தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் துவங்குவது மிகவும் கடினம் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் முடிந்த வரை போட்டியின் சூழ்நிலைகளை சமாளிக்க முன்கூட்டியே உருவாக்கி பயிற்சி எடுப்போம். இங்கிலாந்து செல்லும் போது ஆஸ்திரேலியாவும் நாங்களும் அதை செய்வோம்”

“என்னை பொறுத்த வரை எனது சுமையை மாற்றியதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அதைக் கச்சிதமாக செய்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நான் பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு முன்பாக ஜடேஜா மிகவும் மதிப்பு மிக்கவர் என்று கூறலாம். மேலும் இளமை காலத்திலிருந்து நாங்கள் எங்களது நாட்டுக்காக சுழல் பந்து வீச்சாளராக ஒன்றாக இணைந்து விளையாடி வருகிறோம். ஆரம்பத்தில் எங்களிடம் நல்ல புரிதல் இல்லையென்றாலும் கடந்த 4 – 5 வருடங்களில் அவர் இந்திய அணிக்கு எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதை நான் புரிந்து கொண்டேன்”

- Advertisement -

“அவரால் எனக்கு சில புதிய சோதனைகளை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. தற்சமயத்தில் அவர் அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். அதே சமயம் அக்சர் பட்டேலையும் நீங்கள் மறக்கக்கூடாது. மொத்தத்தில் நாங்கள் 3 பேருமே ஓரளவு பேட்டிங் செய்பவர்களாக இருப்பதற்கு மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று கூறினார். எடுத்துக்காட்டாக 2 கார்ட் ட்ரிக் எனப்படும் யுக்தியை இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் பயன்படுத்தி வருகிறார். அதாவது பந்தை முதல் முறையாக வீசுவது போல் செல்வதை 2 முறை செய்வதாகும்.

இதையும் படிங்க: 20 மி.மீ பச்சை புல் வளர்க்கும் நீங்க பேசக்கூடாது, நாக்பூர் பிட்ச் பற்றி ஆஸ்திரேலியாவுக்கு நட்சத்திர இந்திய வீரர் பதிலடி

இது போன்ற தருணங்களில் முதல் ஆக்சனில் பந்து வரும் என்று பேட்ஸ்மேன்கள் முன்கூட்டியே பேட்டை சுழற்ற ஆரம்பித்து பின்னர் ஏமாற்றமடைந்து அவுட்டாக வாய்ப்பு ஏற்படும். அதை இங்கிலாந்து வீரர் சைமன் ஹுக்ஸ் ரசிகர்களுக்காக தனது ட்விட்டரில் அருமையாக படம் எடுத்து பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement