20 மி.மீ பச்சை புல் வளர்க்கும் நீங்க பேசக்கூடாது, நாக்பூர் பிட்ச் பற்றி ஆஸ்திரேலியாவுக்கு நட்சத்திர இந்திய வீரர் பதிலடி

IND vs AUS Steve SMith
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு துறையில் அபாரமாக செயல்பட்ட இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்டிங் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா அதிகரித்துள்ளது. முன்னதாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் வந்துள்ள ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றிய விவகாரத்தை எழுப்பியது.

IND vs AUS Siraj SMith

- Advertisement -

குறிப்பாக 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் பயிற்சி போட்டிகளில் பச்சை புற்கள் நிறைந்த பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் முதன்மைப் போட்டிகளில் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததாகவும் ஸ்டீவ் ஸ்மித், இயன் ஹீலி உள்ளிட்ட இந்நாள் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதை விட தங்களது பேட்டிங் வரிசையில் இருக்கும் 6 இடது கை பேட்ஸ்மேன்களை இடது கை ஸ்பின்னர்கள் வைத்து தாக்குவதற்காக நாக்பூர் மைதானத்தில் வேண்டுமென்றே இருபுறங்களின் வலது பக்கத்தில் காய்ந்த தன்மையுடன் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலியர்கள் மீண்டும் குற்றம் சாட்டினர்.

ஜடேஜா பதிலடி:
அந்த நிலையில் நடைபெற்ற முதல் போட்டியில் 2.9 சராசரியாக சுழன்று கை கொடுத்த நாக்பூர் பிட்ச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியாவை 177, 91 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் அதே பிட்ச் 3.4 டிகிரி சுழன்று அதிகமாகவே கை கொடுத்த போதிலும் அதில் நல்ல வேரியேசன்களை பயன்படுத்தாத காரணத்தால் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மேலும் அதே பிட்ச்சில் இந்தியா முதல் இன்னிங்ஸ்சிலேயே 400 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது.

IND vs AUS Rohit

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அந்த காலம் முதல் இந்த காலம் வரை 18 – 20 மில்லி மீட்டர் அளவுக்கு பச்சை புற்களுடன் வேகத்துக்கு சாதகமான பிட்ச்சை உருவாக்கும் போதெல்லாம் நாங்கள் குறை சொல்லாததை போல் இந்தியாவிலும் இயற்கையாகவே சுழலுக்கு சாதகமாக இருக்கும் மைதானங்களை ஆஸ்திரேலியர்கள் குறை சொல்லக்கூடாது என்று முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரவீந்திர ஜடேஜா நேரடியாக பதிலளித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்கள் (ஆஸ்திரேலியா) இந்தியா வருவதற்காக விமானத்தில் அமர்ந்த போதே பிட்ச் பற்றி சிந்திக்க துவங்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன். நாக்பூரில் உருவாக்கப்பட்டிருந்த பிட்ச் சுழலுக்கு சாதகமானது தான் ஆனால் அவர்கள் கூறும் அளவுக்கு அதிக சாதகம் கிடையாது. மேலும் அவர்கள் சுழலாத நேரான பந்துகளில் கூட அவுட்டானதை நீங்கள் பார்த்தீர்கள். நாங்களும் சில நேரான பந்துகளில் எம்பிடபுள்யூ முறையில் அவுட்டோனோம். இந்தியாவில் இவ்வாறு நடப்பது சாதாரணமாகும். அதனால் நாங்கள் எங்கள் பலத்திற்கு ஏற்றார் போல் விளையாடுகிறோம்”

Ravindra-Jadeja

“எங்களது வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும் இந்தியாவில் ஸ்பின்னர்கள் தான் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால் நாங்கள் ஏன் அந்த பலத்தை பயன்படுத்தக் கூடாது? மேலும் ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் செல்லும் போது அவர்கள் 18 – 20 மில்லி மீட்டர் பச்சை புற்களை போடுவார்கள். அப்போதெல்லாம் நாங்கள் அந்த பிட்ச்களை பற்றி எதையும் பேசியதில்லை என்பதால் அவர்கள் இந்தியாவிற்கு வரும் போது இங்குள்ள பிட்ச்களை பற்றி பேசக்கூடாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : அடுத்த டைம் படுத்துக்கிட்டு பாருங்க, வாயில் பேசி பல்ப் வாங்கிய ஆஸி அணியை கலாய்த்த டேல் ஸ்டைன் – காரணம் இதோ

அவர் கூறுவது போல கடந்த மாதம் காபாவில் அதிகப்படியான பச்சை புற்கள் நிறைந்த பிட்ச் உருவாக்கி தென்னாபிரிக்காவை வெறும் 2 நாட்களில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் மட்டும் வேகம் இருப்பது இயற்கை என்றும் சொல்லும் ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் இருக்கும் சுழல் செயற்கையாக ஏற்படுத்தப்படுவதாக சொல்லக்கூடாது என்று ஜடேஜா நேரடியாக பதிலடிக் கொடுத்துள்ளார்.

Advertisement