IND vs AUS : அடுத்த டைம் படுத்துக்கிட்டு பாருங்க, வாயில் பேசி பல்ப் வாங்கிய ஆஸி அணியை கலாய்த்த டேல் ஸ்டைன் – காரணம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் கோலாகலமாக துவங்கியது. அதில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது. மறுபுறம் ஏற்கனவே பைனல் வாய்ப்பு உறுதியாகி விட்ட காரணத்தால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்து வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

ஆனால் அதற்காக களத்தில் மோதுவதற்கு முன்பாகவே 2017இல் பயிற்சி போட்டிகளில் ஒரு வகையான பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததாகவும் முதன்மை போட்டிகளில் சுழலுக்கு சாதகமான மைதானம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் ஸ்டீவ் ஸ்மித் முதல் இயன் ஹீலி வரை அத்தனை ஆஸ்திரேலியர்களும் கடுமையாக விமர்சித்து ஸ்லெட்ஜிங் போரை துவக்கினர். அதற்கு கடந்த மாதம் காபாவில் பச்சை புற்கள்களுடன் கூடிய பிட்ச்சை உருவாக்கி தென்னாப்பிரிக்காவை 2 நாட்களில் தோற்கடித்த நீங்கள் இந்தியாவை பேச தகுதியற்றவர்கள் என்று கவாஸ்கர் போன்ற இந்தியர்கள் பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

கலாய்த்த ஸ்டைன்:
அதை விட நாக்பூரில் அமைக்கப்பட்டிருந்த பிட்ச்சை படுக்காத குறையாக முட்டி போட்டு மிகவும் தீவிரமாக ஆராய்ந்த ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணியினர் தங்களது பேட்டிங் வரிசையில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை இடது கை ஸ்பின்னர்களை வைத்து தாக்குவதற்காக வேண்டுமென்றே இருபுறங்களிலும் வலது பக்கத்தில் காய்ந்த தன்மையுடன் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக மீண்டும் விமர்சித்தனர். அந்த நிலையில் துவங்கிய போட்டியில்தங்களுக்கு தங்களுக்கு 2.9 டிகிரி மட்டுமே சுழன்ற நாக்பூர் பிட்ச்சை சரியாக பயன்படுத்திய இந்திய ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியாவை 177, 91 என 2 இன்னிங்சிலும் குறைவான ரன்களுக்கு சுருட்டி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

ஆனால் தங்களுக்கு 3.4 டிகிரி அதிகமாகவே சுழன்று கை கொடுத்த நாக்பூர் பிட்ச்சில் நல்ல வேரியசன்களை பயன்படுத்தாத ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களில் டோட் முர்பி தவிர்த்து நேதன் லயன் போன்ற அனுபவமிக்கவர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் ஆஸ்திரேலியா படு தோல்வியை சந்தித்தது. அத்துடன் அதே மைதானத்தில் 400 ரன்கள் குவித்து பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட இந்தியா நாக்பூர் பிட்ச் பற்றி ஆஸ்திரேலியாவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொய்யாக்கியது.

- Advertisement -

அதனால் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் செயலில் பேசாமல் வாயில் மட்டும் பேசிய ஆஸ்திரேலியாவை இந்திய ரசிகர்கள் வழக்கம் போல கலாய்த்து வருகிறார்கள். இந்நிலையில் முட்டி போட்டி நாக்பூர் பிட்ச்சை தீவிரமாக ஆராய்ந்தும் செயலில் சொதப்பிய ஆஸ்திரேலியாவை முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் ட்விட்டரில் கலாய்க்கும் வகையில் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

கிரிக்கெட் ரசிகர்களே உங்களிடம் ஒரு விரைவான கேள்வி. அதாவது ஒருவர் பிட்ச்சின் தன்மையை எப்படி படிக்க விரும்புவார்? கிட்டத்தட்ட பிட்ச்சை மூக்கில் முகர்ந்து பார்க்கும் அளவுக்கு முழங்கால் போட்டு சோதிப்பீர்களா அல்லது பொதுவாக பிட்ச் அருகில் நின்று அது எவ்வாறு இருக்கும் என்பதை கவனிப்பீர்களா? கடைசியாக இது (முட்டி போட்டி பார்த்தது) உண்மையில் உங்களுக்கு உதவியதா” என்று அடுத்த முறை படுத்துக்கொண்டு பிட்ச்சின் தன்மையை ஆராயுமாறு ஆஸ்திரேலியாவை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் தமது காலங்களில் பிட்ச் தன்மையை எப்படி புரிந்து கொண்டதாக அவர் மேலும் விளக்கியது பின்வருமாறு. “இதை நம்பினால் நம்புங்கள். என்னுடைய காலங்களில் பெரும்பாலான போட்டிகளில் நான் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்க மாட்டேன். மாறாக அந்த பிட்ச்சில் நான் எப்படி பந்து வீசப் போகிறேன் அல்லது பேட்டிங் செய்யப் போகிறேன் என்பதை தான் முதல் முறையாக பார்ப்பேன். அத்துடன் எந்த லென்த்தில் பந்து வீச வேண்டும் என்று தான் பார்ப்பேன்”

இதையும் படிங்க: அவர தூக்கிட்டு இந்தியாவின் துணை கேப்டனாக அஷ்வினை போடுங்க – முன்னாள் வீரர், ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு

“உண்மையை சொன்னால் நான் அதை பார்க்கவில்லை. ஏனெனில் நான் எதை பார்ப்பேன் என்று பயந்தேன். அதனால் என்ன தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை பொருட்படுத்தாமல் நான் அதை பெறுவேன் என்று எண்ணினேன். மேலும் அதில் எப்படி அசத்த வேண்டும் என்று வழிகாட்ட எனது அணியில் சிறந்த வீரர்கள் இருந்தனர். எப்படியிருந்தாலும் அனைவரும் நன்றாக தூங்குங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement