அவர தூக்கிட்டு இந்தியாவின் துணை கேப்டனாக அஷ்வினை போடுங்க – முன்னாள் வீரர், ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா பிரகாசப்படுத்தியுள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக துணை கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக கேஎல் ராகுல் வாய்ப்பு பெற்று விளையாடியது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

ஏனெனில் 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்த அவர் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன் விளையாடி 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தடவலாக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் கோபமடைந்த ரசிகர்களை போலவே அதிருப்தியடைந்த பிசிசிஐ வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருடைய துணை கேப்டன் பதவியையும் ஓப்பனிங் இடத்தையும் பறித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதை கடைசி வாய்ப்பாக கொடுத்துள்ளது.

- Advertisement -

துணை கேப்டன் அஷ்வின்:
ஆனால் முதல் போட்டியில் மீண்டும் 20 ரன்களில் அவுட்டான அவருக்கு இந்தியா வென்று விட்டதால் டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோபமடைந்துள்ள முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் 8 வருடங்களாக விளையாடி சொதப்பலாக செயல்பட்டும் தொடர்ந்து வாய்ப்பு பெறுவதற்கு நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று ராகுலை நேரடியாக ட்விட்டரில் தாக்கினார். அத்துடன் உங்களால் சுப்மன் கில், சர்ப்ராஸ் கால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் விமர்சித்த அவர் உங்களை விட ரவிச்சந்திரன் அஷ்வின் துணை கேப்டனாக இருப்பதற்கு முழு தகுதியானவர் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஏனெனில் கடந்த 2011இல் அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் 2017 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 450+ விக்கெட்டுகளையும் 3000+ ரன்களையும் குவித்துள்ள அவர் ஏகப்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளார். அதை விட 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் கடைசி பந்தில் ஒய்ட் வலையில் சிக்காமல் சரித்திர வெற்றியை பினிஷிங் செய்தது உட்பட பலமுறை தனது சாதுரியத்தால் எதிரணியை அவர் சாய்த்துள்ளார்.

- Advertisement -

அதனால் கிரிக்கெட்டின் சயின்டிஸ்ட் என்று முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் வெளிப்படையாக பாராட்டிய அஷ்வின் கேப்டனாக இருப்பதற்கு முழு தகுதியை பெற்றவர் என்று சொல்லலாம். குறிப்பாக 36 வயதாகும் அவரின் வெள்ளைப் பந்து கேரியர் கேள்விக்குறியாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த சில வருடங்களுக்கு முதன்மை ஸ்பின்னராக விளையாடுவார் என்பதால் தாராளமாக தற்போது அவரை கேப்டனாகவே நியமிக்கலாம்.

ஆனாலும் கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக அதிக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்திய அணிக்கு ஆற்றிய பங்கிற்காக இதுவரை துணை கேப்டனாக கூட அறிவிக்கப்படவில்லை என்பது தமிழக ரசிகர்களின் நீண்ட நாள் ஆதங்கமாக இருந்து வருகிறது. அத்துடன் தனது கேரியரின் கடைசி காலங்களில் அனில் கும்ப்ளே கடந்த 2008ஆம் ஆண்டு இதே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்.

இதையும் படிங்க: முதல்ல உங்களை தான் வீட்டுக்கு அனுப்பனும், சொதப்பல் வீரருக்கு மீண்டும் ஆதரவாக பேசும் கவாஸ்கரை விளாசும் ரசிகர்கள்

அந்த வகையில் 36 வயது என்பது வெறும் நம்பராக நிரூபித்து வரும் அஷ்வினை கேப்டனாக நியமிக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சமூக வலைதலங்களில் ரசிகர்களின் கோரிக்கை பெருகி வருகிறது. குறிப்பாக ராகுல் போன்ற ஒருவருக்கு பதிலாக துணை கேப்டனாக இருப்பதற்கு அஸ்வின் பல மடங்கு தகுதியானவர் என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement