முதல்ல உங்களை தான் வீட்டுக்கு அனுப்பனும், சொதப்பல் வீரருக்கு மீண்டும் ஆதரவாக பேசும் கவாஸ்கரை விளாசும் ரசிகர்கள்

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் இந்தியாவின் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. முன்னதாக கடந்த டிசமபரில் வங்கதேச மண்ணில் முதல் முறையாக சதமடித்து சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை அடித்து உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருந்தது.

இருப்பினும் 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சுயநலத்துடன் விளையாடி 2022க்குப்பின் பார்மை இழந்து 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையின் தடவலாக செயல்பட்டு இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த கேஎல் ராகுலுக்கு துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக மீண்டும் அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் துணை கேப்டன்சிப் பதவி மற்றும் ஓப்பனிங் இடத்தை இழந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள இந்த கடைசி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

- Advertisement -

உங்களை வீட்டுக்கு அனுப்பனும்:
இருப்பினும் அந்த பொறுப்பை உணராமல் மீண்டும் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தடவலாக செயல்பட்ட அவர் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 20 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் கடுப்பான முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் 8 வருடங்களில் 46 போட்டிகளில் விளையாடி வெறும் 34 என்ற மோசமான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன் ராகுல் போன்றவரால் சுப்மன் கில், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் வெளிப்படையாக விமர்சித்த அவர் இவை அனைத்தையும் அறிந்தும் ஐபிஎல் வர்ணனையாளர் வேலை பணத்துக்காக சில முன்னாள் வீரர்கள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவு கொடுப்பது வேதனை அளிப்பதாகவும் ட்விட்டரில் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சிறப்பாக பேட்டிங் செய்த ராகுல் முதல் போட்டியில் சொதப்பினாலும் டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று வெங்கடேஷ் பிரசாத் விமர்சனத்திற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த ஓரிரு வருடங்களாக அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். அதனால் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் டெல்லி போட்டியில் வாய்ப்பு பெறுவார் என்று உறுதியாக சொல்ல முடியும். வேண்டுமானால் அதன் பின் அவரை நீக்கும் முடிவை பற்றி யோசிக்கலாம். ஏனெனில் சுப்மன் கில் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர் அந்த இடத்திற்காக காத்திருக்கிறார்”

“இருப்பினும் ராகுலுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அத்துடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கடந்த 2022 ஜனவரியில் தென்னாபிரிக்க மண்ணில் ராகுல் சதமடித்ததை அனைவருக்கும் நினைவு படுத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர்களுக்கு சொந்த மண்ணில் சதமடிப்பது மிகப்பெரிய சவாலாகும். எனவே தற்போது தடுமாறும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : டெஸ்ட் கேப்டன்ஷிப் பற்றி அவரிடம் தான் கத்துக்கிட்டேன் – முன்னாள் கேப்டனை ஓப்பனாக பாராட்டிய ரோஹித் சர்மா

இதை பார்க்கும் ரசிகர்கள் அப்படிப் பார்த்தால் 2021 மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சதமடித்த அஜிங்கிய ரகானேவுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என்று கவாஸ்கருக்கு பதிலடி கொடுக்கின்றனர். மேலும் இதை வைத்து பார்க்கும் போது ஐபிஎல் வர்ணையாளர் வேலைக்காக வெங்கடேஷ் பிரசாத் கூறியது போல ராகுல் போன்ற சொதப்பும் வீரர்களுக்கு உங்களை போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு கொடுப்பது உண்மை தான் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் முதலில் சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களை இந்திய அணி நலனுக்காக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோபத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement