IND vs AUS : டெஸ்ட் கேப்டன்ஷிப் பற்றி அவரிடம் தான் கத்துக்கிட்டேன் – முன்னாள் கேப்டனை ஓப்பனாக பாராட்டிய ரோஹித் சர்மா

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது. அந்த நிலையில் நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக பிட்ச் பற்றி கிண்டலடித்து விமர்சித்த உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை வெறும் 3 நாட்களில் சுருட்டிய இந்தியா தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை நிரூபித்துள்ளது.

Jadeja

- Advertisement -

இந்த வெற்றிக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக அசத்திய நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், புஜாரா போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போதும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்து 120 ரன்கள் குவித்து பழைய பார்முக்கு திரும்பிய கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவின் வெற்றியில் கறுப்பு குதிரையாக செயல்பட்டார். முன்னதாக விராட் கோலிக்கு பின் கடந்த 2022 ஜனவரியில் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ரோகித் சர்மா கடந்த வருடம் இங்கிலாந்து மண்ணிலும் வங்கதேச மண்ணிலும் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் காயம் காரணமாக களமிறங்கவில்லை.

அவரிடம் கத்துக்கிட்டேன்:
அந்த வகையில் இந்த தொடர் தான் முதல் முறையாக இந்தியாவை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக வழி நடத்தும் தொடராகும். ஆனால் இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று இந்தியாவுக்காக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மட்டுமே கேப்டன்ஷிப் செய்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாதவராகவே இருக்கிறார். இருப்பினும் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இந்த தொடரில் அஷ்வின், ஜடேஜா போன்ற தரமான ஸ்பின்னர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் கற்றுக் கொண்டதாக ரோஹித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார்.

Kohli-and-Rohit

இது பற்றி முதல் போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “நமக்கு விக்கெட்டுகள் கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் நாம் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் எதிரணியினர் ஏதோ தவறு செய்து விக்கெட்டை கொடுப்பார்கள் என்பதை விராட் கோலி கேப்டனாக இருந்த போது நான் உன்னிப்பாக கவனித்துள்ளேன். அது தான் நான் விராட் கோலி கேப்டன்ஷிப் செய்த போது அவரிடம் கற்றுக் கொண்டதாகும். அத்துடன் நமது பவுலர்கள் எப்போதும் சிறப்பாகவே பந்து வீசுகிறார்கள்”

- Advertisement -

“அதனால் எப்போதும் எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தான் எனது கவனம் உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு பந்திலும் எதிரணியின் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால் அது நிச்சயம் நடக்காது. ஒருவேளை அது நடந்தால் அதற்கு நிகர் எதுவும் கிடையாது. எனவே அந்த அணுகு முறையை பின்பற்றி நாம் ஒவ்வொரு பந்தையும் சரியான இடத்தில் பந்து வீசினால் போதுமானது. எஞ்சிய உதவிகளை பிட்ச் உங்களுக்கு தாமாக செய்யும்” என்று கூறினார்.

rohith

முன்னதாக 2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோசம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வர வைத்த விராட் கோலி வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்தவர்.

இதையும் படிங்க: ஞாயிற்று கிழமைன்னு கூட பாக்காம அவங்க எனக்கு ஹெல்ப் பண்ணாங்க – மறக்காமல் நன்றி சொன்ன ரவீந்திர ஜடேஜா

குறிப்பாக ஆரம்பத்தில் சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக இருந்த இந்தியாவை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் எதிரணிகளை தெறிக்க விட்டு சரித்திர வெற்றிகளை குவிக்கும் அணியாக மாற்றிய பெருமை கொண்ட அவரிடம் கேப்டன்ஷிப் நுணுக்கங்களை கற்றுக் கொண்டதாக ரோகித் சர்மா வெளிப்படையாக தெரிவிப்பது இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement