ஞாயிற்று கிழமைன்னு கூட பாக்காம அவங்க எனக்கு ஹெல்ப் பண்ணாங்க – மறக்காமல் நன்றி சொன்ன ரவீந்திர ஜடேஜா

Ravindra-Jadeja
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டான ரவீந்திர ஜடேஜா கடந்த ஆண்டு பிற்பகுதியில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக தவற விட்டார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் என பல முக்கிய தொடர்களை தவறவிட்ட அவர் தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் பயிற்சிக்கு பிறகு சென்னையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடினார். அதன் பின்னர் மீண்டும் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.

IND vs AUS

- Advertisement -

கடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியிருந்த வேளையில் முதல் போட்டியிலேயே தனது சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்திய அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸின் போது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் அவர் 70 ரன்கள் குவித்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய அவர் தற்போது தனது இந்த சிறப்பான செயல்பாடு குறித்து போட்டி முடிந்த பின் பேசுகையில் கூறியதாவது : ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டு வந்து எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி.

Jadeja

நான் பேட்டிங்கில் ரன்களை சேர்த்ததோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன். இதை நினைத்தால் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய இந்த கம்பேக்-க்கு உதவிய தேசிய கிரிக்கெட் அகாடமியின் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றி.

- Advertisement -

ஏனெனில் அவர்கள் என்னுடன் நான் இந்த காயத்திலிருந்து மீண்டு வர கடுமையாக உழைத்தார்கள். ஞாயிற்றுக்கிழமை என்று கூட பார்க்காமல் அவர்கள் எனக்காக உதவியை செய்தார்கள். அந்த வகையில் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த போட்டியில் நான் நல்ல பகுதிகளில் பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்ற நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் என்னால் சிறப்பாக பந்துவீசவும் முடிந்தது.

இதையும் படிங்க : இந்த சேட்டைய நிறுத்திட்டு பேசாம ஒழுங்கா விளையாடுங்க – ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸி அணியை ஓப்பனாக திட்டிய ஆலன் பார்டர்

அதேபோன்று பேட்டிங்கிலும் நான் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. என்னுடைய இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினேன். பின்வரிசையில் பேட்டிங் செய்வது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement