தோனி 3 உ.கோ ஜெயிக்க காரணமே அது தான் – இப்போ யாரு அதை ஃபாலோ பண்றா? ரோஹித் – ட்ராவிட்டை தாக்கிய அஸ்வின்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் தோற்ற இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்வி வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளது. அந்த போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா கொஞ்சம் கூட போராடாமல் தோற்றது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்தது. அதை விட டாஸ் அதிர்ஷ்டத்தை ஆரம்பத்திலேயே பெற்ற கேப்டன் ரோகித் சர்மா அதை சரியாக பயன்படுத்தாமல் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது தோல்விக்கு நேரடி காரணமானது.

Ashwin

- Advertisement -

இத்தனைக்கும் ஏற்கனவே அதிக இடதுகை வீரர்களை அவுட்டாக்கிய பவுலராக உலக சாதனை படைத்துள்ள அவர் ஆஸ்திரேலிய பேட்டிங் தரவரிசையில் 5 இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சுழலுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் சவாலை கொடுப்பார் என்ற கண்ணோட்டத்துடன் நிச்சயம் விளையாட வேண்டுமென சச்சின் உட்பட நிறைய முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதை செய்ய தவறிய ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து இப்போட்டிலும் தோல்வியை சந்தித்துள்ளதால் பதவி விலக வேண்டும் என்று நிறைய ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தோனியின் வழி:
அதே சமயம் வரலாற்றில் இதர கேப்டன்கள் தலைமையில் 7 ஃபைனல்களில் வெறும் ஒரு கோப்பையை மட்டுமே வென்ற இந்தியாவுக்கு 4 ஃபைனல்களில் 3 ஐசிசி உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனியை நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து பாராட்டினர். இந்நிலையில் ஒரு சில தோல்விகளை சந்தித்தாலும் அதற்காக எந்த மாற்றத்தையும் செய்யாமல் கிட்டத்தட்ட ஒரு தொடர் அல்லது ஒரு வருடம் முழுவதும் ஒரே மாதிரியான 11 பேர் அணியுடன் விளையாடியதே தோனி உலக கோப்பைகளை வெல்வதற்கான முக்கிய காரணமாக இருந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Ashwin-3

அதாவது அடிக்கடி மாற்றும் நிகழ்த்தும் போது அணிக்காக விளையாடாமல் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக வீரர்கள் விளையாடுவார்கள் என்பதால் தடுமாற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கும் அவர் இப்போதைய அணியில் தோனியின் ஸ்டைல் பின்பற்றப்படுவதில்லை என ரோஹித் – டிராவிட் ஆகியோரை மறைமுகமாக தாக்கும் வகையில் பேசியுள்ளார். இன்று ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு ஆரம்ப காலங்களில் தொடர் வாய்ப்புகளை வளர்த்துக் கொடுத்த தன்னுடைய முன்னாள் கேப்டன் தோனியை பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு

- Advertisement -

“ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள். அந்த சிறப்பான ஃபைனலில் அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்களாக செயல்பட்டனர். மார்னஸ் லபுஸ்ஷேன் போன்ற வீரர்கள் கவுண்டி தொடரில் விளையாடியது அவர்களுக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும் அது ஒரே ஒரு ஃபைனல் போட்டி என்பதால் யார் என்ன செய்வார் என்பதை நீங்கள் சரியாக சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் முழுமையாக அந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். சொல்லப்போனால் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை தவிர்க்க முடியாத காரணத்தால் தவறவிட்ட அவர்கள் இந்தியாவைப் போலவே எப்போதும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் அணியாக திகழ்கின்றனர்”

ashwin

“இந்தியாவில் தற்போது 10 வருடங்களாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்று அனைவரும் ஆதங்கப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ரசிகர்களின் அந்த ஆதங்கத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்காக சமூக வலைதளப்பக்கங்களில் இவரை நீக்க வேண்டும் அவரை சேர்க்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு வீரரின் தரம் ஒரே நாள் இரவில் மாறிவிடாது. அத்துடன் அனைவரும் எம்எஸ் தோனியின் கேப்டன்ஷிப் பற்றி பேசுகிறோம்”

இதையும் படிங்க:ஒரு மேட்ச்ல தோத்தது பத்தி கவலை இல்ல. இனிமேலும் நாங்க இப்படித்தான் ஆடுவோம் – இங்கிலாந்து கோச் மெக்கல்லம் அதிரடி

“அவர் அப்படி என்ன மேஜிக் செய்தார்? அது மிகவும் எளிதானது. அவரது தலைமையில் நானும் விளையாடியுள்ளேன். அவர் எப்போதும் 15 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுப்பார். அந்த 15 பேர் மற்றும் 11 பேர் கொண்ட அணி தான் தொடர்ந்து வருடம் முழுவதும் விளையாடுவார்கள். வீரர்கள் தங்களுடைய இடத்தை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உணர்வது வெற்றிக்கு மிகவும் முக்கியமாகும்” என்று கூறினார். சொல்லப்போனால் ஐபிஎல் 2023 தொடரிலும் அதே ஸ்டைலை பின்பற்றி தோனி 5வது கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement