ஒரு மேட்ச்ல தோத்தது பத்தி கவலை இல்ல. இனிமேலும் நாங்க இப்படித்தான் ஆடுவோம் – இங்கிலாந்து கோச் மெக்கல்லம் அதிரடி

Mccullum
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜூன் 16-ஆம் தேதி துவங்கி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியானது இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

ENG vs AUS

- Advertisement -

இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி முதல் நாளிலேயே 396 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் இழந்திருந்த வேளையில் டிக்ளர் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்படி அவர்கள் அவசரப்பட்டு முதல் நாளிலேயே டிக்ளர் அறிவித்தது தான் இறுதியில் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்கிற கருத்தும் இருந்தது.

ஆனால் இதுகுறித்து போட்டி முடிந்து பேசியிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் : நாங்கள் முதல் நாளில் டிக்ளர் செய்தது குறித்து எந்த ஒரு கவலையையும் படவில்லை. எங்களுடைய ஆட்டத்தின் ஸ்டைலே அதுதான் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் போட்டிகளிலும் இந்த ஆக்ரோஷமான அணுகுமுறையே தொடரும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அதிரடியான ஒரு பேட்டியை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் எப்போதுமே எங்களது அணியை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள இருக்கிறோம். அதனால் இது போன்ற அதிரடி முடிவுகளை எடுக்கத்தான் வேண்டும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நாங்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் எங்களுடைய திட்டம் இனிவரும் போட்டிகளிலும் தொடரும்.

இதையும் படிங்க : நம்பலானாலும் அதான் நெசம், இந்தியாவுல அந்த மாதிரி ஒரு பவுலர் வரலாற்றிலேயே இல்ல – அஹமத் சேஷாத் பேட்டி

நாங்கள் விளையாடிய விதத்தில் எந்த ஒரு தவறும் இல்லை. அதிரடியான இந்த அணுகுமுறை சரியானது என்பதை ஏற்கனவே நாங்கள் நிரூபித்து காட்டியுள்ளோம். அதனால் இப்போது ஏற்பட்டுள்ள சறுக்களை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எதிர்வரும் போட்டிகளை அதிரடியாக விளையாட இருக்கிறோம் என மெக்கல்லம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement