IND vs WI : ஆண்டர்சன், வார்னே ஆல் டைம் சாதனைகளை தூளாக்கிய அஸ்வின் – 700 விக்கெட்டுகளுடன் படைத்த 5 சாதனை பட்டியல் இதோ

Ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் அறிமுகமாக தேர்வான நிலையில் பேட்டிங்கை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி அச்சுறுத்தலை கொடுத்தார்.

குறிப்பாக தக்நரேன் சந்தர்பால் 12, கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 20 என தொடக்க வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய அவர் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய சவாலை கொடுத்த இளம் அறிமுக வீரர் அலிக் அதனெஸையும் 47 ரன்களில் அவுட்டாக்கினார். அத்துடன் அல்சாரி ஜோசப் 4, ஜோமேல் வேரிக்கன் 1 என டெயில் எண்டர்களையும் விரைவாக அவுட்டாக்கிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா வெறும் 150 ரன்களுக்கு சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றி 60 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருடன் பிளாக்வுட் 14, ஜோஸ்வா டா சில்வா 2, கிமர் ரோச் 1 என 3 வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜாவும் அசத்தினார்.

- Advertisement -

அசத்தல் சாதனைகள்:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அறிமுகப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 40* ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 30* ரன்களும் எடுத்தனர். அதனால் முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80/0 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இப்போட்டியில் ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக 2011இல் தன்னுடைய அறிமுக டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சிவ்நரேன் சந்தர்பாலை அவுட்டாக்கிய அஸ்வின் தற்போது 12 வருடங்கள் கழித்து அவருடைய மகன் தக்நரேன் சந்தர்பாலையும் அவுட்டாக்கியுள்ளார்.

1. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தந்தை – மகனை அவுட்டாக்கிய முதல் இந்திய பவுலர் என்ற தனித்துவமான சாதனை படைத்த அவர் மொத்தமாக தம்முடைய கேரியரில் 33வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த 6வது வீரர் என்ற இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2. மேலும் ஓய்வு பெறாத வீரர்களில் அதிக 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. முத்தையா முரளிதரன் : 67
2. ஷேன் வார்னே : 37
3. ரிச்சர்ட் ஹாட்லி : 36
4. அனில் கும்ப்ளே : 35
5. ரங்கனா ஹெராத் : 34
6. ரவிச்சந்திரன் அஸ்வின் : 33*
7. ஜேம்ஸ் ஆண்டர்சன் : 32

3. அதை விட ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 151 விக்கெட்டுகளையும் டி20 கிரிக்கெட்டில் 72 விக்கெட்டுகளையும் எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 474* விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து 700க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் சாதனையை சமன் செய்துள்ள அவர் ஆல் டைம் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார். அந்த பட்டியல்:
1. அனில் கும்ப்ளே : 956
2. ஹர்பஜன் சிங் : 711
3. ரவிச்சந்திரன் அஸ்வின் : 702*

- Advertisement -

4. அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 700 விக்கெட்டுகளை எடுத்த 2வது பவுலர் என்ற வார்னே சாதனையும் அவர் உடைத்தார். அந்த பட்டியல்:
1. முத்தையா முரளிதரன் : 308 இன்னிங்ஸ்
2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 351* இன்னிங்ஸ்
3. ஷேன் வார்னே : 354 இன்னிங்ஸ்
4. வாக்கார் யூனிஸ் : 355 இன்னிங்ஸ்
5. கிளன் மெக்ராத் : 358 இன்னிங்ஸ்

இதையும் படிங்க:IND vs WI : அவங்க என்கிட்ட கேட்டாங்க. அதான் ஒத்துக்கிட்டேன். 3ஆவது இடத்தில் களமிறங்குவது குறித்து – சுப்மன் கில் விளக்கம்

5. அது போக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த இந்தியர் என்ற சுபாஷ் குப்தே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, அனில் கும்ப்ளே ஆகியோரது சாதனையையும் அஸ்வின் (தலா 3) சமன் செய்தார். இப்படி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நிறைய சாதனைகள் படைத்தும் அவருக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

Advertisement