IND vs AUS : என்னாங்க பெரிய நம்பர் 2 பேட்ஸ்மேன், தரமான ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக 2 அசால்ட்டான சாதனை படைத்த அஷ்வின்

Ravichandran Ashwin Steve Smith
- Advertisement -

ஐசிசி தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக திகழும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதனால் 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்து தொடர்ந்து 4வது முறையாக கைப்பற்றிய முதல் அணியாகவும் சாதனை படைத்துள்ளது.

முன்னதாக இத்தொடரில் சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினை சமாளிக்க கடந்த மாதம் தங்களது நாட்டில் நடைபெற்ற பிக்பேஷ் தொடரின் போதே தேவையான திட்டங்களை வகுத்து விட்டதாக மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்தனர். அதை விட இந்தியாவுக்கு வந்ததும் அஸ்வின் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து ஸ்டீவ் ஸ்மித் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது உலக அளவில் வைரலானது.

- Advertisement -

என்னாங்க பெரிய ஸ்மித்:
ஆனால் எதற்கும் பதறாத அஷ்வின் அவர்களது திட்டங்களை தவிடு பொடியாக்கி முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவின் வெற்றியில் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். அதை விட டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஐசிசி தரவரிசையில் டாப் 2 பேட்ஸ்மேன்களாக ஜொலிக்கும் மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்த அஷ்வின் என்றுமே போலியால் அசலுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பதை நிரூபித்து காட்டினார்.

மேலும் நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் போன்ற நட்சத்திரங்களை மிஞ்சும் அளவுக்கு அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஸ்டீவ் ஸ்மித் உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்தவர் என்பதை அனைவரும் அறிவோம். சொல்லப்போனால் அதே வேகத்தில் 2019 வரை அஷ்வினுக்கு எதிராகவும் 61.1 என்ற பேட்டிங் சராசரியில் செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 3 முறை மட்டுமே அவுட்டாகியுள்ளார்.

- Advertisement -

ஆனால் சமீப காலங்களில் தனது அனுபவத்தால் முன்னேறி வரும் அஷ்வின் 2020க்குப்பின் ஸ்டீவ் ஸ்மித்தை 5 முறை அவுட்டாக்கி அலற விட்டு வருகிறார். ஆனால் 2020க்குப்பின் அஷ்வினுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் வெறும் 14.6 என்ற மோசமான சராசரியில் பேட்டிங் செய்து வருகிறார். அந்த வகையில் மொத்தமாக இதுவரை 8 முறை அவுட் செய்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தை அதிக முறை அவுட்டாக்கிய சுழல் பந்து வீச்சாளர் என்ற அபாரமான சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் : 8*
2. யாசிர் ஷா : 7
3. ரவீந்திர ஜடேஜா/ரங்கனா ஹெராத் : தலா 5

அது போக டெல்லி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவரை டக் அவுட்டாக்கிய அஸ்வின் 2வது இன்னிங்ஸில் வெறும் 9 ரன்களுக்கு அவுட்டாக்கினர். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் ஸ்டீவ் ஸ்மித்தை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய முதல் ஸ்பின்னர் என்ற அற்புதமான பெயரையும் ரவிச்சந்திரன் அஷ்வின் பெற்றுள்ளார்.

- Advertisement -

அத்துடன் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மெல்போர்ன் மைதானத்தில் அவரை ஏற்கனவே டக் அவுட்டாக்கிய அஷ்வின் டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் டக் அவுட்டாக்கினர். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தை 2 முறை டக் அவுட் செய்த முதல் பந்து வீச்சாளர் என்ற மற்றுமொரு அபார சாதனையை ஏற்கனவே ரவிச்சந்திரன் அஷ்வின் படைத்துள்ளார்.

இதையும் படிங்க:ரசிகர்களின் கண் துடைக்கும் முடிவு, உங்க மீதிருந்த மரியாதையே போச்சு – பிசிசிஐ, டிராவிட்டை விளாசும் ரசிகர்கள்

மொத்தத்தில் என்னாங்க பெரிய ஸ்டீவ் ஸ்மித் என்பது போல உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக இருக்கும் அவரை ரவிச்சந்திரன் அஸ்வின் அசால்டாக அவுட்டாக்கி இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருவது தமிழக ரசிகர்களுக்கு பெருமைக்குரிய அம்சமாகும்.

Advertisement