ரசிகர்களின் கண் துடைக்கும் முடிவு, உங்க மீதிருந்த மரியாதையே போச்சு – பிசிசிஐ, டிராவிட்டை விளாசும் ரசிகர்கள்

Rahul Dravid KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை 99% இந்தியா உறுதி செய்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் அதிரடியாக செயல்பட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் கேஎல் ராகுல் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருவது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த ராகுல் நாளடைவில் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்பட்ட அவரது பெயரில் இதர 10 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் கோப்பையையும் சேர்த்ததாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

கண் துடைப்பு:
அத்துடன் அதே தொடரில் முதல் முறையாக சதமடித்து தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்குமாறும் கோரிக்கைகள் குவிந்தன. ஆனால் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் வாய்ப்பு பெற்ற ராகுல் முதலிரண்டு போட்டிகளில் முறையே 20, 15, 1 என சொற்ப ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் கடுப்பாகியுள்ள இந்திய ரசிகர்கள் 3வது போட்டியில் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி 2 போட்டிகளில் விளையாடும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொந்தளித்து வரும் ரசிகர்களை அமைதிப்படுத்துவதற்காக ராகுலை துணை கேப்டன் பதவியிலிருந்து மட்டும் நீக்கியுள்ள பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர் மீண்டும் அவருக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். அதனால் இது வெறும் கண்துடைப்பு முடிவு என்று பிசிசிஐயை மீண்டும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

அதை விட இது போன்ற மோசமான தருணங்கள் வருவது சகஜம் என்றாலும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற சதமடித்து தன்னை கிளாஸ் வீரர் என்று நிரூபித்துள்ள கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும் என்று டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியின் முடிவில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது மீண்டும் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இங்கே ராகுல் மீது யாரும் பகைமையால் விமர்சிக்கவில்லை.

1. மாறாக கடைசியாக கடந்த 2022 ஜனவரியில் சதமடித்திருந்த அவர் அதன் பின் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மேலும் தரமான வீரர்கள் யாராக இருந்தாலும் தடுமாறுவது சகஜம் என்பது உண்மை தான். ஆனால் 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்த விராட் கோலி கூட அந்த இரண்டரை வருட காலகட்டங்களில் நிறைய அரை சதங்களை அடித்திருந்தார். ஆனால் இவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

2. அத்துடன் தொடர் வாய்ப்புகளை பெறுவதற்கு விராட் கோலி ஏற்கனவே பல 1000 ரன்களையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தவர். ஆனால் இவர் ஓரிரு வெற்றிகளை தவிர்த்து பெரும்பாலும் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

3. அதை விட குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் ஆட்டநாயகன் விருது வென்றும் அடுத்த போட்டியில் பெஞ்சில் அமர வைக்கப்படும் போது சுப்மன் கில், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் காத்திருக்கும் போது இவருக்கு மட்டும் தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேல் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருவதே ரசிகர்களின் இந்த கொந்தளிப்புக்கு காரணமாகும்.

இதையும் படிங்க: IND vs AUS : 12.1 ஓவரில் ஆஸ்திரேலியாவின் கதையை முடித்த ஜடேஜா, அஷ்வினை முந்தி ஆசிய அளவில் படைத்த அபார சாதனை இதோ

ஆனால் இவை அனைத்தையும் தெரிந்தும் மீண்டும் மீண்டும் ராகுலுக்கு ஆதரவும் வாய்ப்பும் கொடுக்கும் உங்கள் மீது இருந்த மரியாதையை போய் விட்டதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது நிறைய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வெளிப்படையாகவே கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement