IND vs AUS : 12.1 ஓவரில் ஆஸ்திரேலியாவின் கதையை முடித்த ஜடேஜா, அஷ்வினை முந்தி ஆசிய அளவில் படைத்த அபார சாதனை இதோ

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக திகழும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதன் வாயிலாக ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ள இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையையும் தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019 உலக கோப்பைக்கு பின் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல் ரவுண்டராக முன்னேறிய ரவீந்திர ஜடேஜா 2022 ஆசிய கோப்பையில் காயத்தால் வெளியேறி டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை.

அது அந்த 2 தொடர்களிலும் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்த நிலையில் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜடேஜா முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே குஜராத் தேர்தலில் தனது மனைவிக்காக பிரச்சாரம் செய்ததால் பிசிசிஐ அதிருப்தியடைந்தது. அதனால் இத்தொடரில் விளையாட வேண்டுமானால் முதலில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி உங்களுடைய பார்ம் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றை நிரூபிக்குமாறு அவருக்கு பிசிசிஐ நிபந்தனை விதித்தது.

- Advertisement -

அபார சாதனை:
அந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி போட்டியில் 7 விக்கெட்கள் எடுத்து கம்பேக் கொடுத்த அவர் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 70 ரன்களையும் 7 விக்கெட்டுகளையும் சாய்த்து இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அப்படி ஏற்கனவே அபார கம்பேக் கொடுத்து தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கிய அவர் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளையும் 26 ரன்களையும் எடுத்து மீண்டும் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

குறிப்பாக 1 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை தனது மாயாஜால சுழலில் சிக்க வைத்த அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 35, உஸ்மான் கவாஜா 6, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 0, அலெக்ஸ் கேரி 0 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்தார். அந்த வகையில் வெறும் 12.1 ஓவரில் 1 மெய்டன் உட்பட 42 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 7 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

1. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகவும் குறைந்த ஓவரில் 7 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற அஸ்வின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா : 12.1 ஓவர்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023
2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 13.5 ஓவர்கள் – நியூசிலாந்துக்கு எதிராக, 2016
3. நரேந்தர் ஹிர்வமவாணி : 15.2 ஓவர்கள் – வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 1988
4. இர்பான் பதான் : 15.2 ஓவர்கள் ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2005

2. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகவும் குறைந்த ஓவரில் 7 விக்கெட்டுகளை எடுத்த ஆசிய ஸ்பின்னர் என்ற அஷ்வின் சாதனையும் தகர்த்த ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். உலக அளவில் கடந்த 2022ஆம் ஆண்டு கிங்ஸ்மீட் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தென்னாபிரிக்காவின் கேசவ் மகாராஜ் 10 ஓவரில் 32 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்களை எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: வீடியோ : அதிரடியாக விளையாடியும் கேப்டனாக சுயநலமின்றி அவுட்டான ரோஹித் சர்மா – காரணத்தை அறிந்து பாராட்டும் ரசிகர்கள்

3. அத்துடன் அடுத்தடுத்த ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது என்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் உட்பட எந்த இந்திய வீரரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றதில்லை.

Advertisement