முதல் டெஸ்டில் களமிறங்க சரியானவர் அஸ்வினா? ஜடேஜாவா? தெ.ஆ மண்ணில் இருவரின் ரெகார்ட்

Ashwin and Jadeja.jpeg
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் சிறப்பாக விளையாடி 1992 முதல் இதுவரை சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி முதல் முறையாக தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது.

பொதுவாகவே தென்னாபிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் வேகத்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 2 ஸ்பின்னர்கள் ஜோடியாக விளையாடுவதை பார்ப்பது அரிதாகும். அதற்கேற்றார் போல் செஞ்சூரியன் நகரில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டிக்கான பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருக்கும் என்றும் கடைசி 2 நாட்களில் மட்டுமே லேசாக சுழலுக்கு கை கொடுக்கும் என்றும் அம்மைதான பராமரிப்பாளர் பிரையன் ப்ளாய் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வாய்ப்பு யாருக்கு:
அதனால் முதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் அப்போட்டியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் இந்தியா களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அது போன்ற சூழ்நிலையில் அஸ்வினை விட பேட்டிங்கில் சற்று அதிகமாக அசத்தக்கூடிய காரணத்தால் ரவீந்திர ஜடேஜா வாய்ப்பு பெறுவார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் அந்த 2 தரமான ஸ்பின்னர்கள் தென்னாப்பிரிக்க மண்ணில் இதற்கு முன்பு வெளிப்படுத்திய செயல்பாடுகளின் புள்ளி விவரத்தை பற்றி பார்ப்போம். வரலாற்றில் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடிய 12 டெஸ்ட் இன்னிங்ஸில் அஸ்வின் வெறும் 10 விக்கெட்டுகளை 50.50 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். அதே போல தென்னாப்பிரிக்க மண்ணில் பேட்டிங்கில் அவர் 197 ரன்களை 17.90 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

மறுபுறம் தென்னாப்பிரிக்க மண்ணில் இதற்கு முன் வெறும் 2 டெஸ்ட் இன்னிங்ஸில் மட்டுமே விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் 6 விக்கெட்களை 25.66 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். இருப்பினும் பேட்டிங்கில் அவர் வெறும் 8 ரன்களை 4.00 என்ற சராசரியில் எடுத்துள்ளார். எனவே பந்து வீச்சில் அஷ்வினை விட ஜடேஜா நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ தக்க வைக்க முக்கிய பிளான்.. வெ.இ ஜாம்பவானை வளைத்து போட்ட இங்கிலாந்து

ஆனால் ஜடேஜாவை விட பேட்டிங்கில் அஸ்வின் தென்னாப்பிரிக்க மண்ணில் நல்ல செயல்பாடுகளை கொடுத்துள்ளார். இருப்பினும் கடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அஸ்வினை இந்திய அணி நிர்வாகம் பெஞ்சில் அமர வைத்தது. அதனால் இந்த போட்டியிலும் அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா விளையாடுவதற்கே அதிகமான வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement