2024 டி20 உ.கோ தக்க வைக்க முக்கிய பிளான்.. வெ.இ ஜாம்பவானை வளைத்து போட்ட இங்கிலாந்து

WI vs ENg
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா 6வது முறையாக வென்று சாதனை படைத்தது. மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா மாபெரும் இறுதி போட்டியில் சொதப்பி கோப்பையை விட்டது. அதை விட நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து மோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் 7வது இடத்தை மட்டுமே பிடித்து வெளியேறியது.

சொல்லப்போனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்த அந்த அணி 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தகுதி பெறாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் சந்தித்த சில வெற்றிகளால் தப்பிய அந்த அணி 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து ரசிகர்களை நிம்மதியடைய வைத்தது.

- Advertisement -

இங்கிலாந்தின் பிளான்:
ஆனால் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அங்கு முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. அதை விட அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும் தடுமாற்றமாக விளையாடிய இங்கிலாந்து 3 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

அதனால் 2022 டி20 உலகக் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து 2024 உலகக் கோப்பையை எப்படி தக்க வைக்கப்போகிறது என்ற கவலை மீண்டும் அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் கைரன் பொல்லார்ட் தங்களுடைய துணைப் பயிற்சியாளராக செயல்படுவார் என்று இங்கிலாந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

2012 டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் மொத்தம் 101 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டவர். அத்துடன் மும்பை ஐபிஎல் அணியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக விளையாடிய அவர் தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அவர் போகனும்னு நெனச்சது அவோரட முடிவு.. ஹார்டிக் பாண்டியா ட்ரேடிங் குறித்து வாய் திறந்த – ஆஷிஷ் நெஹ்ரா

அந்த வகையில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ள அவரை வைத்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் எம்மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் விளையாடி 2024 டி20 உலகக் கோப்பையை வென்று தக்க வைப்பதற்கான திட்டத்துடன் இந்த அறிவிப்பை இங்கிலாந்து வாரியம் வெளியிட்டுள்ளது. எனவே இங்கிலாந்து ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டம் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement