அவர் போகனும்னு நெனச்சது அவோரட முடிவு.. ஹார்டிக் பாண்டியா ட்ரேடிங் குறித்து வாய் திறந்த – ஆஷிஷ் நெஹ்ரா

Nehra-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் துபாயில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் டிரேடிங் முறையில் சில வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் குஜராத் அணியில் இருந்து ஹார்டிக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களது அணிக்கு டிரேடிங் செய்திருந்தது.

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு அணியின் கேப்டனை இன்னொரு அணி டிரேடிங் முறையில் மாற்றியது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. அதோடு குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு சென்ற ஹார்டிக் பாண்டியாவை நேரடியாக அந்த அணியின் நிர்வாகம் அடுத்த ஆண்டிற்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது.

- Advertisement -

குஜராத் அணிக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ஹார்டிக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட வேளையில் அறிமுக தொடரிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.

அதோடு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி சிஎஸ்கே அணியிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு மாற்றப்பட்டது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்பட்டாலும் அவரது இடமாற்றம் குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் :

- Advertisement -

பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு சென்றது ஒரு பெரிய விடயம் கிடையாது. ஏனெனில் அவர் மும்பை அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். எனவே அவர் அந்த அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். பொதுவாகவே ஒரு வீரர் அவர்களது விருப்பத்திற்கு விளையாடலாம் அதற்கு அவர்களிடம் உரிமை உள்ளது. எனவே அவர் சென்றதால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் அணிக்கு மென்டாராகும் சுரேஷ் ரெய்னா.. ஆனா சி.எஸ்.கே கிடையாது – எந்த அணிக்கு தெரியுமா?

இருப்பினும் ஹர்திக் பாண்டியா ஒரு வீரருக்கு பதிலாக மற்றொரு வீரரை தேர்வு செய்வது கடினம் ஆனாலும் தற்போது நமது அணியில் நல்ல ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஹார்திக் பாண்டியாவை போன்ற ஆல்ரவுண்டராக அசத்த ஓமர்சாய் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். அதேபோன்று இம்முறை ஷாருக்கானும் குஜராத் அணிக்கு வந்துள்ளதால் நிச்சயம் குஜராத் அணியின் பின்வரிசை பலமாகியுள்ளது என்று ஆசிஷ் நெஹ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement