ஐ.பி.எல் அணிக்கு மென்டாராகும் சுரேஷ் ரெய்னா.. ஆனா சி.எஸ்.கே கிடையாது – எந்த அணிக்கு தெரியுமா?

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னா கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2018-ஆம் ஆண்டு வரை 226 ஒருநாள் போட்டிகள், 18 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த சுரேஷ் ரெய்னா மிகச் சிறப்பான ஃபீல்டரும் ஆவார்.

சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் 2008-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை விளையாடயுள்ள சுரேஷ் ரெய்னா 205 போட்டிகளில் பங்கேற்று 5528 ரன்களை குவித்துள்ளார். அதோடு தோனி கேப்டனாக செயல்படும் போது சென்னை அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட அனுபவமும் உடையவர்.

- Advertisement -

சென்னை அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடிய சுரேஷ் ரெய்னா கடைசியாக 2022-ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னர் சென்னை அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். அதை தொடர்ந்து வேறு ஒரு அணியில் விளையாட மனம் இல்லாமல் சுரேஷ் ரெய்னாவும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து 37 வயதாகும் சுரேஷ் ரெய்னா தற்போது லெஜெண்ட்ஸ் லீக் போன்ற கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் அவர் விரைவில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என்ற பேச்சும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் விரைவில் சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் லக்னோ அணியின் மென்டராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு மாறிவிட்டதால் சொந்த மாநிலத்தை சேர்ந்த வீரரான சுரேஷ் ரெய்னாவை லக்னோ அணி அவர்களது மென்டராக நியமிக்க விருப்பப்படுவதாக பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க : 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்சேல் ஸ்டார்க்.. ஒரு பால் போடுவதற்கு எவ்வளவு தொகை? விவரம் இதோ

அதனை கண்ட சுரேஷ் ரெய்னாவும் : எல்லா நேரமும் உங்களுடைய தகவல் சரியானதாக இருக்காது என்று ட்வீட் செய்துள்ளார். இருப்பினும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னா நிச்சயம் லக்னோ அணிக்காக மென்டராக செயல்பட ஒப்புக் கொண்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்ற பேச்சுகளும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement