24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்சேல் ஸ்டார்க்.. ஒரு பால் போடுவதற்கு எவ்வளவு தொகை? விவரம் இதோ

Mitchell Starc KKr
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்று முடிந்தது. அதில் இந்திய வீரர்களை விட 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய ஐசிசி கோப்பைகளை வென்ற காரணத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் பல கோடிகளுக்கு விலை போனார்கள்.

குறிப்பாக அந்த 2 தொடர்களையும் கேப்டனாக வென்ற ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் 20.50 கோடிகளுக்கு சன் ரைசர் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். அதனால் ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் 20 கோடிகளுக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

ஒரு பந்துக்கு எவ்வளவு:
ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரையே மிஞ்சிய மற்றொரு நட்சத்திர ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் கொல்கத்தாவுக்காக 24.75 கோடிகளுக்காக வாங்கப்பட்டது மொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் நேரடி ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போனார் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்த அவர் தற்போது விராட் கோலி, தோனி, ரோகித் சர்மா போன்ற இந்திய நட்சத்திரங்களை விட அதிக சம்பளத்தை பெற்றுள்ளார்.

இத்தனைக்கும் நாட்டுக்காக விளையாட கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரை குப்பையாக புறக்கணித்து வந்த அவருக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் உலக அளவில் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் தம்முடைய திறமை மற்றும் தரத்தால் இவ்வளவு கோடிகளை பெற்றுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

இந்நிலையில் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் 2024 ஐபிஎல் தொடரில் வீசப்போகும் ஒரு பந்தின் விலை மற்றுமொரு வியப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது. அதாவது கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனாலும் எப்படியும் குறைந்தபட்சம் 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதில் ஒரு பவுலர் அதிகபட்சமாக 4 ஓவர்களை வீச முடியும்.

இதையும் படிங்க: வாயில் சவால் விட்ட ஆஸி கேப்டனை.. செயலில் தோற்கடித்து போட்டோ எடுக்க வைத்த இந்தியா

அதன் அடிப்படையில் ஒயிட், நோபால் போன்ற பந்துகளை தவிர்த்து 14 போட்டிகளில் மிட்சேல் ஸ்டார்க் 336 லீகல் பந்துகளை வீச முடியும். அதை வைத்து கணக்கிடும் போது 2024 சீசனில் ஸ்டார்க் வீசப் போகும் ஒரு பந்தின் மதிப்பு சுமார் 7.36 லட்சமாகும். இந்தியாவில் பல கோடி மக்களின் ஆண்டு வருமானமே 7 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில் மிட்சேல் ஸ்டார்க் ஒரு பந்தை வீசுவதற்காக 7.36 லட்சம் சம்பளமாக பெற உள்ளார் என்பது வியப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது என்றால் மிகையாகாது.

Advertisement