வாயில் சவால் விட்ட ஆஸி கேப்டனை.. செயலில் தோற்கடித்து போட்டோ எடுக்க வைத்த இந்தியா

Alyssa Healy
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டிசம்பர் 21ஆம் தேதி மும்பையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தகிலா மெக்ராத் 50 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பூஜா வஸ்திரகர் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 406 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதிகபட்சமாக ஸ்மிரித்தி மந்தனா 74, ஜெமிமா ரோட்ரிகஸ் 73 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆஸ்லே கார்ட்னர் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு 2வது இன்னிங்ஸில் 261 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

மாஸ் சம்பவம்:
அதிகபட்சமாக தஹிலா மெக்ராத் 73 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில் 75 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனா 38* ரன்கள் எடுத்து வெற்றி பெற கொடுத்தார். இதன் வாயிலாக இந்தியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ட்ரா 4 தோல்விகளுக்கு பின் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்து புதிய சரித்திரம் படைத்தது.

அது போக ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியாவை 10 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்கடித்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. முன்னதாக சமீபத்தில் மெக் லென்னிங் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நட்சத்திர வீராங்கனை மற்றும் மிட்சேல் ஸ்டார்க்கின் மனைவி அலிசா ஹீலி ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பின் இத்தொடரில் முதல் முறையாக இந்தியாவை எதிர்கொண்டார்.

- Advertisement -

அந்த நிலையில் இப்போட்டியில் இந்தியா வேண்டுமென்றே வெல்வதற்கு சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் போட்டி துவங்குவதற்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஆனால் அஸ்லே கார்ட்னர் போன்ற தரமான ஸ்பின்னர் எங்களிடமும் இருப்பதால் அவ்வாறு செய்வது இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் தங்களுக்குத் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் செயலாக இருக்கும் என்று அவர் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே எச்சரிக்கையும் சவாலும் விடுத்தார்.

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவும் இல்ல.. சூரியாவும் இல்ல.. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 கேப்டன் – யார் தெரியுமா?

இறுதியில் களத்தில் சிறப்பாக விளையாடிய இந்தியா வாயில் சவால் விட்ட அவரது தலைமையிலான ஆஸ்திரேலியாவை முதல் முறையாக தோற்கடித்து சாதனை படைத்தது. அதற்காக கொடுக்கப்பட்ட கோப்பையுடன் இந்திய அணியினர் செய்தியாளர்களுக்கு போஸ் கொடுக்கும் போது அலிசா ஹீலி எதையும் மனதில் வைக்காமல் எதிரணியை பாராட்டும் வகையில் கேமராவில் புகைப்படம் எடுத்தார். அந்த வகையில் சவால் விட்ட ஆஸ்திரேலிய கேப்டனை செயலில் வீழ்த்திய இந்திய மகளிரணி கடைசியில் அவரது கையாலேயே விரும்பி புகைப்படம் எடுக்கும் அளவுக்கு சாதித்து காட்டியுள்ளது ரசிகர்களை பெருமையடைய வைக்கிறது.

Advertisement