ஹார்டிக் பாண்டியாவும் இல்ல.. சூரியாவும் இல்ல.. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 கேப்டன் – யார் தெரியுமா?

SKY-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அதனை தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரை குறிவைத்துள்ளது.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் டி20 அணியில் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு தொடர்ச்சியாக இளம் வீரர்களை கொண்ட டி20 அணியே பல்வேறு தொடர்களுக்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்த ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக சமீபத்திய தொடர்களில் இடம்பெறாமல் இருந்து வருவதால் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரின் போது சூரியகுமார் யாதவுக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் அடுத்ததாக ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி ஹார்டிக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருமே காயம் அடைந்துள்ள வேளையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா அணிக்கு திரும்ப இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் போய்டுங்க : இன்னும் 10 நாள்ல ஸ்டார்ட் பண்ணிடுவாரு.. தோனி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – காசி விஸ்வநாதன்

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித சர்வதேச டி20 போட்டியிலும் விளையாடாமல் இருந்து வரும் ரோகித் சர்மா மீண்டும் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Advertisement