இன்னும் 10 நாள்ல ஸ்டார்ட் பண்ணிடுவாரு.. தோனி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – காசி விஸ்வநாதன்

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போதே சாம்பியன் பட்டத்துடன் தோனி ஓய்வு பெறுவார் என்று பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனாலும் அந்த தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு தோனி ரசிகர்களுக்காக மேலும் ஒரு ஆண்டு விளையாட முயற்சி செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு கடந்த ஜூன் மாதம் தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சையையும் செய்து கொண்டு ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? எப்போது அவர் பயிற்சியை ஆரம்பிக்கப்போகிறார்? என்று பல்வேறு கேள்வி அவரை சுற்றி இருக்கிறது.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது அவற்றிற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

தோனி தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். மேலும் அவர் தற்போது தனது உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளார். அதோடு இன்னும் 10 நாட்களில் தோனி வலை பயிற்சியை ஆரம்பிக்க உள்ளார். மார்ச் முதல் வாரத்தில் எங்களது பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

- Advertisement -

அதன்படி முதல் கட்டமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் முகாமினை நடத்த காத்திருக்கிறோம். மார்ச் 22-ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. அதேபோன்று அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடப்பதனால் ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்படும் என்று பல்வேறு கருத்துக்கள் இருந்தது வருகிறது.

இதையும் படிங்க : ரொம்ப எதிர்பாக்காதீங்க.. தெ.ஆ மண்ணில் அவரால் சதம், இரட்டை சதமடிப்பது கஷ்டம்.. கம்பீர் அதிரடி கருத்து

இருப்பினும் வேறு நாட்டிற்கு ஐபிஎல் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றும் இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் போட்டி அட்டவணை உறுதி செய்யப்படும் என்றும் காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement