IND vs AUS : கடந்த 10 வருஷமா இந்திய மண்ணில் தொடர்ந்து ஜெயிக்க அந்த 2 பேரும் தான் காரணம் – ரோஹித் சர்மா ஓப்பனாக பாராட்டு

Rohit-Sharma
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாகவும் கிரிக்கெட்டின் அசுரனாகவும் திகழும் ஆஸ்திரேலியாவை 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்து 4 தொடர்களில் தோற்கடித்து இந்த கோப்பையை தொடர்ந்து 4 முறை வென்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. மறுபுறம் 3வது போட்டியில் வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்த ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. அதே போல் கடைசி போட்டி டிராவில் முடிந்தாலும் இலங்கையை நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு 2வது அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது.

Ashwin Jadeja Nattu

- Advertisement -

முன்னதாக கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. அதற்கு சுழல் பந்து வீச்சு துறையில் இரட்டை குழல் துப்பாக்கிகளாக ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் லெப்ட் ஆர்ம் ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முக்கிய காரணமாக திகழ்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இரட்டை குழல் துப்பாக்கிகள்:
எடுத்துக்காட்டாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013இல் சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 4 – 0 (4) என்ற கணக்கில் தோனி தலைமையில் இந்தியா வெல்வதற்கு 29 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார். அதே போல் 2017 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை விராட் கோலி தலைமையில் 2 – 1 (4) என்ற கணக்கில் வெல்ல 25 விக்கெட்டுகளையும் 177 ரன்களையும் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா தொடர் நாயகன் விருது வென்றார்.

Ashwin-Jadeja

ஆனால் முன்பை விட தற்போது பேட்டிங்கில் முன்னேறி வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய ரன்களை எடுக்கக்கூடிய ஆல் ரவுண்டர்களாக மாறியுள்ள இவர்களில் இந்த தொடரில் அஷ்வின் 25 விக்கெட்களும் 86 ரன்களும் ஜடேஜா 22 விக்கெட்டுகளும் 135 ரன்களும் எடுத்து முக்கிய பங்காற்றியதால் ஜோடியாக தொடர்நாயகன் விருதை வென்றனர். இதே போலவே கடந்த 10 வருடங்களில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் அனைத்து டாப் அணிகளுக்கு எதிராகவும் இந்தியா சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட இவர்கள் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் 36 வயதாகும் அஸ்வினும் 34 வயதாகும் ஜடேஜாவும் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் 2027இல் இந்தியாவில் நடைபெறும் தொடரிலும் விளையாடுவார்களா என்பது தமக்கு தெரியாது என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 10 வருடங்களில் இந்திய மண்ணில் இந்தியா அசைக்க முடியாத அணியாக திகழ்வதற்கு முக்கிய பங்காற்றும் இவர்கள் முடிந்த வரை அதிக நாட்கள் விளையாட வேண்டும் என்பதே தம்முடைய விருப்பம் என்று பாராட்டும் ரோஹித் சர்மா இது பற்றி பேசியது பின்வருமாறு.

Rohit-Sharma

“உண்மையாக அவர்கள் அதுவரை விளையாடுவார்களா என்பது எனக்கு தெரியாது. நானும் அதுவரை விளையாடுவேனா என்பது தெரியாது. ஏனெனில் 4 வருடங்கள் என்பது அதிகமாகும். இருப்பினும் உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்காக அந்த இருவரும் நிலைத்து விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். அந்த இருவரும் எங்களுடைய மராத்தான் வீரர்கள். குறிப்பாக இந்திய சூழ்நிலைகளில் இந்தளவுக்கு நாங்கள் வெற்றி நடை போடுவதற்கான முழுமையான பாராட்டும் அவர்களை சேரும்”

இதையும் படிங்க:IND vs AUS : பேசாம நான் டீம விட்டு போயிடுறேன், தாறுமாறாக கலாய்த்த அஷ்வின் – புஜாராவின் கலகலப்பான நன்றிக்கடன் பதில் இதோ

“எங்களது வெற்றியின் பெரும்பாலான பங்கு அவர்களை சேரும். ஏனெனில் ஒரு சில வருடங்கள் மட்டுமல்லாமல் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அவர்கள் வெற்றியில் பங்காற்றி வருகிறார்கள். எனவே அவர்கள் இந்தியாவுக்காக முடிந்த அளவுக்கு நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். ஏனெனில் அவர்களைப் போன்ற வீரர்களின் இடத்தை நிரப்புவது மிக மிக கடினமாகும்” என்று கூறினார்.

Advertisement