55/0 டூ 60/3 என இங்கிலாந்தை தெறிக்க விடும் ஜடேஜா – அஸ்வின் ஜோடி.. கும்ப்ளே – ஹர்பஜனை மிஞ்சி தனித்துவ சாதனை

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட மெகா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலிக்கு பதிலாக கேஎல் ராகுல் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்துக்கு 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்த பென் டுக்கெட் 35 ரன்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த ஓலி போப்பை வெறும் 1 ரன்னில் ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கி அசத்திய நிலையில் அடுத்த சில ஓவரில் மறுபுறம் சவாலை கொடுத்த மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லியை 20 ரன்களில் அவுட்டாக்கி அஸ்வின் தெறிக்க விட்டார்.

- Advertisement -

சாதனை ஜோடி:
அதனால் 55/0 என்ற நல்ல நிலையில் இருந்த இங்கிலாந்து திடீரென 60/3 என சரிந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்வதற்காக போராடினார்கள். அந்த வகையில் முதல் நாள் உணவு இடைவெளியில் விக்கெட்டை விடாமல் விளையாடும் இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து 108/3 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் ஜோ ரூட் 18* ரன்கள் ஜானி பேர்ஸ்டோ 32* ரன்களுடன் இந்தியாவுக்கு சவாலை கொடுக்க முயற்சித்து வருகிறார்கள். மறுபுறம் தங்களுடைய சொந்த மண்ணில் அசத்தி வரும் இந்தியா சார்பில் இதுவரை இப்போட்டியில் இதுவரை ரவிச்சந்திரன் அஸ்வின் 2, ரவீந்திர ஜடேஜா 1 என இருவரும் சேர்ந்து மொத்தம் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோடியாக சேர்ந்து அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலிங் ஜோடி என்ற அனில் கும்ப்ளே – ஹர்பஜன் சிங் ஆகியோரின் மாபெரும் சாதனையை உடைத்துள்ள அஸ்வின் – ஜடேஜா புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர். அந்த பட்டியல் (விக்கெட்கள்):
1. ரவிச்சந்திரன் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா : 503*
2. அனில் கும்ப்ளே – ஹர்பஜன் சிங் : 501
3. ஜஹீர் கான் – ஹர்பஜன் சிங் : 474

இதையும் படிங்க: கழற்றிவிட மனசில்ல.. குல்தீப் யாதவுக்கு பதிலாக அக்சர் படேல் தேர்வு செய்தது ஏன்? கேப்டன் ரோஹித் விளக்கம்

கடந்த 2011 முதல் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். அதில் பெரும்பாலான போட்டிகளில் எதிரணியை தங்களுடைய சிறப்பான சுழல் பந்து வீச்சால் தெறிக்க விட்டு வரும் இந்த சாதனை ஜோடி 2012க்குப்பின் சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமல் சாதனை படைத்து வெற்றி நடை போட முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement