கழற்றிவிட மனசில்ல.. குல்தீப் யாதவுக்கு பதிலாக அக்சர் படேல் தேர்வு செய்தது ஏன்? கேப்டன் ரோஹித் விளக்கம்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் இங்கிலாந்தின் 11 பேர் அணி நேற்றே வெளியிடப்பட்டது.

மறுபுறம் இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலிக்கு பதிலாக கேஎல் ராகுல் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அதன் காரணமாக விக்கெட் கீப்பராக கே.எஸ் பரத் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய அணிக்காக விளையாட தேர்வானார்கள்.

- Advertisement -

பின்னணி காரணம்:
குறிப்பாக இங்கிலாந்து ஜேம்ஸ் ஆண்டர்சனை கழற்றி விட்டு மார்க் வுட்டை மட்டுமே தேர்வு செய்த நிலையில் இந்தியா சாதுரியமாக 2 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்தது. அத்துடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் 2 சுழல் பந்து வீச்சாளர்களாக தேர்வான நிலையில் 3வது ஸ்பின்னராக அக்சர் படேல் விளையாடுவார் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.

அதனால் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவுக்கு இம்முறையும் வாய்ப்பு கிடைக்காதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் அக்சர் பட்டேல் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங்கில் முக்கியமான ரன்களை எடுத்து வெற்றியில் பங்காற்றியதால் பேட்டிங் வரிசையின் ஆழத்தை அதிகரிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

- Advertisement -

அதே சமயம் குல்தீப்பை சேர்க்காமல் விட தங்களுக்கு மனமே இல்லை என்றும் தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் அணியில் எடுக்காதது மிகவும் கடினமான முடிவாகும். அவரை தேர்வு செய்வதற்கு நாங்கள் நிறைய சிந்தித்தோம். இருப்பினும் இந்திய சூழ்நிலைகளில் அச்சர் பட்டேல் விளையாடிய போட்டிகளில் எல்லாம் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்”

இதையும் படிங்க: முதல் டெஸ்டில் இங்கிலாந்து செய்த தவறை செய்யாத ரோஹித்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்

“அவர் எங்களுடைய பேட்டிங் வரிசைக்கு ஆழத்தை சேர்க்கிறார். குறிப்பாக கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போது அவர் நன்றாக செயல்பட்டார். அதுவே அக்ஸர் பட்டேலை நாங்கள் தேர்வு செய்வதற்கான காரணமாகும்” என்று கூறினார். இதை தொடர்ந்து நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாற்றமாக பேட்டிங் செய்வது வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement